- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் ப்ரீ ரிலீஸ்.. தளபதி விஜய் என்ட்ரி தருகிறாரா?.. குட்டி ஸ்டோரி சொல்வாரோ

ஜவான் ப்ரீ ரிலீஸ்.. தளபதி விஜய் என்ட்ரி தருகிறாரா?.. குட்டி ஸ்டோரி சொல்வாரோ

- Advertisement -

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ தமிழில் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் பிகில் படத்தைத் தவிர்த்த மற்ற படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டானவை. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் என்ற பெயரை அவர் பிடித்துவிட்டார்.

இப்படிப்பட்ட சூழலில் அடுத்ததாக அவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக நடந்துவந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது.

- Advertisement -

படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்றும்; ஷாருக்கான் நிச்சயம் வேறு மாதிரியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருப்பார் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாவதாக தெரிவிக்கின்றனர்.

ட்ரெய்லர் மட்டுமின்றி படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அனிருத்துக்கும் ரசிகர்கள் பாராட்டை தெரிவித்துவருகின்றனர். ஜவான் படத்தின் மூலம் கண்டிப்பாக அனிருத் பாலிவுட்டில் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தப்போகிறார் என்றும் ஆரூடம் கூறிவருகின்றனர்

- Advertisement -

இந்நிலையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் இன்று சென்னையில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் அட்மினான ஜெகதீஷ் அதுதொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு இன்று மாலை சாய்ராம் கல்லூரியில் நடக்கும் என உறுதி செய்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க லண்டனில் இருந்ததாக கூறப்பட்ட விஜய் அமெரிக்காவின் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளியானது.

இதனையடுத்து ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் கலந்துகொள்வதற்காகத்தான் விஜய் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார் என ரசிகர்கள் கணிகக் ஆரம்பித்திருக்கின்றனர்.அதுமட்டுமின்றி அட்லீயும், விஜய்யும் ரொம்பவே நெருக்கம் என்பதால் கண்டிப்பாக இதில் அவர் கலந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ஒருவேளை கலந்துகொண்டால் இந்த ஈவெண்ட்டில் குட்டி ஸ்டோரி ஏதேனும் சொல்வரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்