- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் மாரி செல்வராஜ்க்கு தனுஷ், ரஜினிகாந்த் என வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்... அடுத்ததாக யார்...

இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு தனுஷ், ரஜினிகாந்த் என வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்… அடுத்ததாக யார் கூட இணையப் போகிறார் தெரியுமா…

- Advertisement -

கற்றது தமிழ் இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் மாரி செல்வராஜ் நடித்திருப்பார். தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி உள்ளிட்ட திரைப்படங்கள் வரை அவருடன் இணைந்து பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களை பட்டியலிட்டால், அதில் நிச்சயம் பரியேறும் பெருமாளுக்கும் ஒரு இடம் இருக்கும். அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத திரைப்படமாக தலைத்தோங்கியது அந்த திரைப்படம். இதற்கு முக்கிய காரணம் மாரி செல்வராஜ் அந்த திரைப்படத்தில் கூற வந்த சமூகம் சார்ந்த கருத்து தான்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், எப்படி அனைத்து தடை கற்களையும் தாண்டி சட்டம் பயில்கிறான் என்பதையும், அவனை சாதி ரீதியாக கூட இருப்பவர்கள் எவ்வாறு சாடுகிறார்கள் என்பதையும் கன்னத்தில் அறைந்தார் போல் காட்சிப்படுத்தி இருந்தார் மாரி செல்வராஜ்.

இப்படி தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் திரை உலகம் போற்றும் இயக்குனராக மாறிய மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை எடுத்தார். 90களில் நடப்பது போல் இந்த கதை எடுக்கப்பட்டது. அதில் முக்கியமாக பேருந்து அரசியலை மையப்படுத்தி காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

முதல் படத்தில் வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை மையப்படுத்தி இருந்த மாரி, இதில் கதாநாயகன் கையில் வாள் கொடுத்திருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்திலும் பரபரப்பாக பேசப்பட்ட மாரி செல்வராஜ், தற்போது வாழை திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

அடுத்ததாக துருவ் விக்ரம்மை வைத்து கபடி தொடர்பான படத்தை அவர் எடுக்க இருக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் விரைவில் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் தொடங்க உள்ளது. இதன் பிறகு அவர் மீண்டும் தனுசுடன் இணைகிறார். அதன்பிறகு அவர் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. தற்போது இந்த பட்டியலில் சூர்யாவும் இணைந்து இருக்கிறார். மாரி செல்வராஜ் சூர்யா இணையும் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கர்ணன் படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்