- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு அரசியல்வாதியாக இந்த விஷயத்தை பத்தி தவெக தலைவர் விஜய் யோசிச்சிருப்பாரா? - அட இத்தனை...

ஒரு அரசியல்வாதியாக இந்த விஷயத்தை பத்தி தவெக தலைவர் விஜய் யோசிச்சிருப்பாரா? – அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முதல் நிலை நடிகராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது நடித்து முடித்துள்ள தி கோட் படமும், இனி எச் வினோத் இயக்கத்தில் ஒரு படமும் போதும் என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டார்.

ஏனெனில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அவர் துவங்கியிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்வதுதான் தனது லட்சியம் என்றும் அவர் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இப்போது கட்சி பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

- Advertisement -

வருகிற செப்டம்டர் மாதம் 21ம் தேதி திருச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் பேர் அமரும் வகைகயில் இருக்கை வசதிகளுடன் மிக பிரமாண்டமான மாநாட்டு பந்தல், வருகிற கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கமகம மட்டன் பிரியாணி, சிக்கன் சில்லி என விருந்து பரிமாறவும் விஜய் ஆலோசித்து வருகிறார்.

இதற்கிடையே விஜய் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. திமுக, அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக சார்ந்த ஏராளமான கட்சியினர், விஜய் கட்சிக்கு தாவி வருகின்றனர். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க மற்ற கட்சிகளில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட விஜய் கட்சிக்கு மாற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார் என்றுதான் தமிழக மக்கள் அவரது அரசியல் வருகையை விரும்புகின்றனர். நிச்சயம் அவரை வரவேற்கும் விதமாக, வருகிற சட்டசபை தேர்தலில் விஜய்க்கு நிறைய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஒருவேளை அவர் தமிழக முதல்வராகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் மாற்றுகட்சிகளில் இருந்து வருபவர்கள் குறிப்பாக அதிமுக திமுக போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்தவர்களாக தான் இருப்பர். ஏற்கனவே பல பிரச்னைகளை மக்கள் மத்தியிலும், கட்சியிலும் செய்து அவப்பெயர் பெற்றவர்களாக இருப்பர். அப்படிபட்டவர்களை விஜய் தனது கட்சியில் சேர்த்தால், அது அவரது கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடும். அதனால் இதுபோல் மாற்றுக்கட்சி சார்ந்தவர்களை தனது கட்சியில் சேர்க்கும்போது அதில் தகுதியான, நல்லவர்களை பில்டர் செய்து சேர்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்