- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் பிறந்த நாளில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் செய்த தரமான விஷயம் -...

ரஜினிகாந்த் பிறந்த நாளில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் செய்த தரமான விஷயம் – அரசியல்வாதியாக கெடைச்ச இடத்தில் எல்லாம் கெத்து காட்டும் தளபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை, இனிமேல் விஜய்தான் என வாரிசு பட விழாவில் சிலர் கொளுத்திப் போட்ட நெருப்பு, அடுத்து பெரிய அளவில் கோலிவுட் வட்டாரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நேரத்தில் ரஜினி சொன்ன காக்கா, கழுகு கதையும் அந்த நெருப்பில் நெய் ஊற்றுவதாக அமைய, ரஜினி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரிந்து கட்டி சண்டை போட்டனர்.

இதையடுத்து லியோ பட விழாவில் பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார்ன்னா அது ரஜினிகாந்த் மட்டும்தான். நான் தளபதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். ரசிகர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் தளபதியாக இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுகிறேன் என்று அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் தி கோட் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியை, கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்து, தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார். பிறகு ஆகஸ்ட் 22ம் தேதி, தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கடந்த அக்டோபர் 27ம் தேதி கட்சியில் அரசியல் முதல் மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

இப்போது தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய், இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் தனது கட்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு, தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே இன்று நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கூலி படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினிக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில் ரஜினிக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார். அந்த பதிவில், பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அந்த பதிவில் விஜய் கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்