- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணமான பின், தன் மனைவி பிரேமலதாவுக்கு, விஜயகாந்த் அளித்த முதல் பரிசு இதுதான் -...

திருமணமான பின், தன் மனைவி பிரேமலதாவுக்கு, விஜயகாந்த் அளித்த முதல் பரிசு இதுதான் – கேப்டன் மனசு எப்பவுமே தங்கம்தாங்க

- Advertisement -

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். தொண்டையில் துளைகள் இடப்பட்டு, வெண்டிலேட்டர் முறையில் செயற்கை சுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரலில் கிருமிகள் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் புரட்சிக்கலைஞராக அழைக்கப்பட்டு, பின் கேப்டனாக மாறினார். அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், ஒரு கட்டத்துக்கு பிறகு தேமுதிக கட்சியை துவங்கி, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். அதிமுக ஆட்சிக்காலத்தில் விஜயகாந்த், எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். திமுக ஸ்டாலின், மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

- Advertisement -

ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், வீட்டில் முழுநேர ஓய்வில் இருந்தார். கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீஷூம் கவனித்து கொண்ட நிலையில், கட்சியில் முன்பை போல பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இப்போது மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, அவருக்கு 16, 17 வயதிலேயே உதவும் குணம் இருந்துள்ளது. பியுசி படிக்கும் போதே, ரைஸ்மில்லை கவனிப்பதற்காக படிப்பை நிறுத்தி விட்டனர். அப்போது கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தார். ஒரு ரிக்‌ஷாக்காரர் கஷ்டம் என்று வந்து கேட்டவுடன் தங்க சங்கிலியை, அவருக்கு கழட்டி கொடுத்துவிட்டார்.

- Advertisement -

இதை தெரிந்துக்கொண்ட அவரது அப்பா, அடித்திருக்கிறார். உன் உழைப்பில் வாங்கியதை தான் நீ பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என திட்டியிருக்கிறார். அப்போது, இனி என் உழைப்பில் சம்பாதித்து வாங்கித்தான் என் கழுத்தில் செயின் போடுவேன் என சபதம் எடுத்த அவர், அதே போல் அவர் நடித்த முதல் படத்தில் வாங்கிய சம்பளத்தில் தான் கழுத்தில் தங்க செயின் போட்டிருக்கிறார்.

என்னை திருமணம் செய்து வீட்டுக்கு வந்தவுடன் அவர் என் கழுத்தில் அன்பு பரிசாக எனக்கு தந்தது, அவரது கழுத்தில் அணிந்திருந்த அந்த தங்க செயினை தான். என் உழைப்பில் முதன் முதலில் வாங்கிய இந்த தங்க செயினை, என் வாழ்க்கையில் வந்துள்ள உனக்கு பரிசளிக்கிறேன் என்று கூறி என் கழுத்தில் அணிவித்தார் என்று கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

- Advertisement -

சற்று முன்