சுப்ரமணியபுரம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இளையராஜா குறித்து மிகக் கடுமையான விமர்சித்தவர். இளையராஜாவை இசைஞானியாக, என் குருவாக ஏற்றுக்கொள்வேன். தனிப்பட்ட முறையில் அவரைப் போன்ற ஒரு மட்டமான மனிதர் யாருமே கிடையாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது இளையராஜா- வைரமுத்து விவகாரத்தில் கங்கை அமரன், வைரமுத்து குறித்து பேசியதற்கு பதில் தந்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இளையராஜா வைரமுத்து மோதல் கொடுத்து ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, எந்த ஒரு பாடலாக இருந்தாலும் இசை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மொழியும் முக்கியம். ஆனால் ஒரு பாடலுக்கு முக்கியமாக திகழ்வது முதலில் மொழிதான் என்பதை யாரும் மறுப்பதில்லை. இதைத்தான் வைரமுத்து அந்த மேடையிலே பேசியிருந்தார். மேலும் அவர் எந்த ஒரு இடத்திலும் இளையராஜாவை தாக்கி பேசவில்லை. இளையராஜா பெயரை குறிப்பிடவில்லை.
ஆனால் ஒரே ஒரு இடத்தில் அவர் சொன்ன அஞ்ஞானி என்ற வார்த்தை மட்டுமே இளையராஜாவை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. அதற்கு கங்கை அமரன் கோபப்பட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் நல்ல நண்பர்களாக தான் இளையராஜா, வைரமுத்து இருந்திருக்கிறார்கள். திடீரென ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் பிரிந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் இருவரும் ரொம்ப நாட்களாக தனிப்பட்ட பகை வளர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதை பொதுப் பகையாக மாற்றுவது தவறான செயல். இளையராஜா இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலை எழுதுவதற்கு வைரமுத்துவுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால், வைரமுத்து பாடலாசிரியர் ஆகியிருக்க மாட்டார் என்று அவரை வளர்த்து விட்டதே நாங்கள் தான் என்று கங்கை அமரன் சொல்வது மிகவும் தவறான பேச்சு.
கங்கை அம்மன் சொல்வதுபடி பார்த்தால், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி என்ற படத்தில் இளையராஜாவுக்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார். அப்படியே அவர் கொடுக்கவில்லை என்றால் இளையராஜா இசையமைப்பாளரை ஆகியிருக்க மாட்டார் என்று சொல்வது போல் இருக்கிறது. அப்படி என்றால் இளையராஜா இசையைமைப்பாளர் ஆக, புகழ் பெற பஞ்சு அருணாசலம்தான் காரணமா?
திறமையானவர்கள் எப்படி இருந்தாலும், எங்கே இருந்தாலும் அவர்களது திறமை அவர்களை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடும். என்னை பொருத்தவரையில் மொழியும், இசையும் கலந்தது தான் பாடல். அனைத்தையும் நம் ரசிக்க வேண்டுமே, தவிர அதை சொந்தம் கொண்டாடி பிரச்சனை பண்ணக் கூடாது என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.





