- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த தி கோட் படத்தை தொடர்ந்து, ஏஐ தொழில்நுட்பத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்கும் 2வது...

விஜய் நடித்த தி கோட் படத்தை தொடர்ந்து, ஏஐ தொழில்நுட்பத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்கும் 2வது படம் எது தெரியுமா? – சந்தோஷப்பட்ட கேப்டன் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 1980களில் மதுரையில் இருந்து தன் நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன், சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தவர் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். பிறகு ஒரு காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிப் போனார். கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலும் வெற்றிப் படங்களையே கொடுத்தார்.

திரைப்பட கல்லூரியில் படித்த மாணவர்களை நம்பாத நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜயகாந்த் தான் அவர்களை முழுமையாக நம்பி, தன் படங்களை இயக்க அனுமதித்தார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக அவர்களது பல படங்களையும் தயாரித்தார். திரைப்பட கல்லூரி சேர்ந்த 41 புதுமுக இயக்குனர்களுக்கு இப்படி வாய்ப்பளித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

- Advertisement -

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான் நடிகர்ளை கலந்துக்கொள்ள செய்து, நடிகர் சங்கத்துக்கு பல ஆண்டுகளாக இருந்த பல கோடி ரூபாய்கள் கடனை அடைத்தார். அப்போதே பெரிய தொகையாக ரூ. 1.75 கோடி சங்க இருப்பாகவும் வைத்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கி, 2016ம் ஆண்டில் திமுகவை 3ம் இடத்துக்கு தள்ளி, 2ம் இடத்தில் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார். ஆனால், காலத்தின் அலங்கோலமாக கேப்டன் உடல் நலம் குன்றி ஆறேழு ஆண்டுகளாக நோயுடன் போராடி கடந்த ஆண்டு டிசம்பரில் மறைந்தார்.

- Advertisement -

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மரியாதை செய்யும் விதமாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தில், விஜயகாந்த் இடம்பெறும் சில காட்சிகளை ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெறச் செய்துள்ளார். ஒரு நிமிடம் படத்தில் வரும் இந்த காட்சியில், கேப்டனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்த காட்சியை இயக்குனர் வெங்கட்பிரபு உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது இன்னொரு படத்திலும், கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜயகாந்தின் 2வது மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்திலும், விஜயகாந்த் இடம்பெறும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்தில் அவர் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ராகவா லாரன்ஸ்சும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் அவரது மகன் சண்முக பாண்டியன் படத்தில் நடிப்பது, அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்