ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு இணையான ஒரு டாப் நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து “கேபட்ன்” என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலுக்குள் புகுந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்த விஜயகாந்த், ஒரு கட்டத்திற்கு பிறகு உடல் நிலை சரியில்லாமல் போக வீட்டிற்குள்ளே முடங்கிப்போனார். விஜயகாந்த் ஏழை எளிய மக்களிடம் வள்ளல் என்ற பெயரை பெற்றவர். அவருக்கு இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் போனது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவிற்குள் ஹீரோவாக அறிமுகமானார். “சகாப்தம்”, “மதுரை வீரன்” போன்ற திரைப்படங்களில் நடித்த சண்முக பாண்டியன் தற்போது “படை வீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் யானைகளை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து பகுதிகளில் நடக்க உள்ளதாம். இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது யானை கூட்டங்களுக்கு நடுவே சண்முக பாண்டியன் ஓடுவது போன்ற காட்சிகளை படமாக்கினார்களாம்.
அந்த காட்சிகளை படமாக்கியபோது சண்முக பாண்டியன் கொஞ்சமும் கூட பயப்படவே இல்லையாம். இதனை பார்த்த படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும் “படைத் தலைவன்” திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.





