- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் பாடல்; விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம்...

லப்பர் பந்து படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்கக்குடம் பாடல்; விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் டைரக்டர் பர்மிஷன் வாங்கினாரா? – அட இப்படி சொல்லிட்டாரே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக இருந்து வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்துக்கு இருந்த பல கோடி ரூபாய் கடனை அடைத்தவர்.

தமிழ் சினிமாத்துறையில் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய நடிகர் முதல் யூனிட்டில் வேலை செய்யும் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்ற நடைமுறையை கொண்டு வந்தவர். விஜயகாந்தை பொருத்தவரை பிறருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். அதேபோல் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது பிறந்த நாளின் பலவிதமான நலத்திட்டங்களை, உதவிகளை மக்களுக்கு செய்தவர்.

- Advertisement -

விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் வரவேற்பையும் பெற்றவர். சட்டசபை தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி, அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தவர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்ட நிலையில், 7 ஆண்டுகள் நோயுடன் போராடிய விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாத் துறையினரையும், ரசிகர்களையும் மிகப்பெரிய வேதனையில் ஆழ்த்தியது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் வரும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த காட்சியில் விஜயகாந்தை காட்டியதற்காக படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரேமலதாவிற்கு ரூ. ஐம்பது லட்சம் வழங்கியது. விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இனிமேல் எங்களது அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அவரது மனைவி பிரேமலதா அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர்பந்து படத்தில், விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தில் வரும் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல், விஜயகாந்த் ரசிகராக தினேஷ் அறிமுகமாகும் காட்சியில் வருகிறது. இதற்கு முறைப்படி பிரேமலதாவிடம் அனுமதி பெறப்பட்டதாக என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சமீபத்தில் பிரேமலதா கூறுகையில், திரைப்படங்களில் கேப்டனின் பாடல் மற்றும் போஸ்டர்களை பயன்படுத்தினால், காப்புரிமை யாரிடமும் கேட்க மாட்டோம். ஏனென்றால் விஜயகாந்த் எங்களின் சொத்து அல்ல, அவர் மக்களின் சொத்து என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்