- Advertisement -
தேமுதிக எம்பி எல்கே சுதீஷ் குடும்ப திருமண விழாவில் நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அவர் மீது உருவக்கேலி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், உடல் எடை குறைந்து இருப்பதால் அவரது நடை மாறி இருக்கலாம். குடும்ப திருமண விழாவில் சந்தோஷமாக ஆடுவதில் என்ன தவறு? விஷால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தது போல இவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். இதையெல்லாம் எப்படி பிரேமலதா உள்ளிட்ட குடும்பத்தினர் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை என்று அந்தணன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





