- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் திரைப்படத்திலிருந்து அது எப்போ வேணாலும் வெளி வரலாமாம்... என்ன தளபதி ரசிகர்களே ரெடியா!...

கோட் திரைப்படத்திலிருந்து அது எப்போ வேணாலும் வெளி வரலாமாம்… என்ன தளபதி ரசிகர்களே ரெடியா!…

- Advertisement -

லியோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக கோட் படத்தில் நடித்து வருகிறார். The Greatest Of All Time என்பதைச் சுருக்கியே கோட் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜயை வைத்து பிகில் திரைப்படத்தை எடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரேம்ஜி அமரன், வைபவ், அஜ்மல், இவானா, யுகேந்திரன், யோகி பாபு, வி டிவி கணேஷ் உள்ளிட்டோர் படத்தில் உள்ளனர். இதே போல் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த மைக் மோகன், பிரசாந்த், லைலா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளனர்.

கோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரும் யோசிக்கும் வகையில் அமைந்திருந்தது. வயதான விஜய் மற்றும் இளைஞர் விஜய் என இரண்டு கதாபாத்திரங்கள் அதில் இடம்பெற்று இருந்தன. இதனால் இந்த திரைப்படம் தந்தை மகன் கான்செப்ட் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் படக்குழு அது பற்றி எதுவும் கூறவில்லை.

- Advertisement -

ஒரு பக்கம் இருக்க படத்தில் இரண்டு விஜய் தான் என்றும், ஆனால் டைம் ட்ராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உள்ள விஜய் நிகழ்காலத்தில் உள்ள விஜயை சந்திப்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருக்கலாம் எனவும் பேசி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஒரு பாடலுக்காக திரிஷா நடனமாடி இருப்பது உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக, சினிமா விமர்சகர்கள் இதனை உறுதிப்படுத்தினர். படத்தில் விஜய் ஒரு பாடலை பாடி இருப்பதையும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் அந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கோட் படத்தின் பாடல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று சினிமா விமர்சகர்கள் ட்விஸ்ட் வைத்திருப்பதால், விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்