- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதந்திர தினம், தீபாவளி என கோட் படத்தை பண்டிகை கால படமாக வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல்...

சுதந்திர தினம், தீபாவளி என கோட் படத்தை பண்டிகை கால படமாக வெளியிடுவதில் நீடிக்கும் சிக்கல் – தளபதிக்கு இப்படி ஒரு போட்டியா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பிப்ரவரி மாதம் இறுதி வாரமும், அடுத்து மார்ச் மாதம் முழுவதும் விறுவிறுப்பாக படத்தின் ஷூட்டிங்கை முடிக்க வெங்கட்பிரபு சுறுசுறுப்பாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். படக்குழுவும் மும்முரமாக அடுத்தடுத்த பணிகளை செய்து வருகிறது.

கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை முதலில், விஜய் பிறந்த நாளான ஜூலை 22ம் தேதி ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் முடிவு செய்தது. அதற்கு முன், ஜூலை 13ல் தொடர் விடுமுறை வருவதால், அந்த நாட்களில் ரிலீஸ் செய்யலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அதற்குள் போஸ்ட் புரடக்சன் பணிகள் நீடிக்கலாம் என்பதால், அந்த தேதி தவிர்க்கப்பட்டது.

- Advertisement -

அதன்பின் வரும் ஆகஸ்ட் 15ல் கோட் படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதுதான் புஷ்பா 2 பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு இருப்பதால், கோட் படத்துக்கு தியேட்டர்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

அதே போல் இந்தியில் சிங்கம் என்ற படமும் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை ரெட்ஜெயிண்ட் மூவி வெளியிடுகிறது. அதே போல் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா என்ற படமும் அந்த நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் 3 படங்களும் ஒரே நேரத்தில் வரும்போது, பல சிக்கல்கள் ஏற்படும் என கோட் படம், ஆகஸ்ட் 15ல் வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு கோட் படத்தை வெளியிடலாம் என்றால் அப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. அதுதவிர இந்தியில் சிங்கம் என்ற படமும் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு முக்கிய படங்களுக்கு மத்தியில் கோட் படம் ரிலீஸானால், ரசிகர்களின் பேராதரவை பெறுவது எளிதாக இருக்காது.

இப்போது விஜய் பிறந்த நாள், ஆகஸ்ட் 15, தீபாவளி என முக்கிய பண்டிகை நாட்களில் கோட் படத்தை வெளியிட முடியாத சூழலில், கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவும் குழப்பத்தில் உள்ளது. ஆனால் விஜய் எந்த டென்சனும் இல்லாமல், அவரது அரசியல் பணிகளில் இப்போதே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மற்ற படங்கள் போட்டியில்லாத நேரத்தில், விஜய் படம் வந்தால் வசூலை அள்ளிவிடலாம் என திட்டமிட்ட நிலையில் இப்படி மற்ற நடிகர்களின் படங்கள் போட்டியாக வருவது, கோட் படக்குழுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்