- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் வெங்கட்பிரபு பயங்கர அப்செட் - கோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த விஷயம் -...

இயக்குநர் வெங்கட்பிரபு பயங்கர அப்செட் – கோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த விஷயம் – விஜய் கிட்ட இப்படி சிக்க விட்டுட்டாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 69வது படம். இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு, அதாவது 70வது படத்துடன் தனது, சினிமா கேரியருக்கு புல் ஸ்டாப் வைத்துவிட்டு, அரசியல் வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறார்.

விஜய் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆன போதே வெங்கட்பிரபுவிடம் முக்கியமான ஒரு கண்டிசனை போட்டிருந்தார். அது, படம் குறித்த எந்த தகவலும் வெளியே அடிக்கடி லீக் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களை தந்து விடுகிறது. அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்து, படம் வெளியான பின் அது அவர்களுக்கு ஏமாற்றம் தந்து, படத்தின் வெற்றியை அது பாதிக்கிறது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஏனெனில் லியோ படம் குறித்த தகவல்கள் இப்படி அடிக்கடி வெளியாகி, அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் பலமடங்கு ஏற்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் இருந்த பில்டப்புக்கும், திரையில் பார்த்த லியோ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போனதால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

அதுபோன்ற ஒரு சிக்கலும், தேவையில்லாத ஒரு எதிர்பார்ப்பும் கோட் படத்துக்கும் வந்துவிடக் கூடாது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் மிக கவனமாக இருங்கள். எந்த விஷயத்தையும் லீக் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். வெங்கட்பிரபுவும் அதற்கு உறுதி அளித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த படத்துக்கு கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதை, இயக்குநர் வெங்கட்பிரபு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே, சமூக வலைதளங்களில் அந்த பெயர் பரவிவிட்டது. அதன்பிறகு 10 நாட்கள் கழித்துதான், அந்த பெயரையே படக்குழு அறிவித்தது.

இப்போது நடிகர் விஜய், பிரசாந்த் இருவரும் நடுரோட்டில் நின்றுக்கொண்டு ஆக்ரோஷமாக பேசிக்கொள்ளும் காட்சி, வீடியோவாக எடுக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சகோதரி பவதாரணி இறந்த சோகத்தில் இருந்து வெங்கட்பிரபு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில், இப்படி ஒரு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு, விஜயிடம் சிக்க வைத்துவிட்டதால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் வெங்கட்பிரபு.

- Advertisement -

சற்று முன்