- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி விஜயை வெச்சு செஞ்சுட்டாரா இயக்குனர் வெங்கட்பிரபு? உங்க பில்டப் அளவுக்கு அவுட்புட் இல்லையேப்பா… -...

தளபதி விஜயை வெச்சு செஞ்சுட்டாரா இயக்குனர் வெங்கட்பிரபு? உங்க பில்டப் அளவுக்கு அவுட்புட் இல்லையேப்பா… – 3வது பாடல் காட்சியிலும் சொதப்பிய தி கோட் படக்குழு

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ வெளியானது. அதன்பிறகு இந்த படம் வெளியாக உள்ளது.

லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. முதல் பாதியில் ரசிகர்களை குஷிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், இரண்டாம் பாகத்தில் ரசிகர்களை திக்குமுக்காடி திணறடித்து விட்டார். அதிலும் இரட்டை பிறவி, நரபலி, லியோ குறித்த சஸ்பென்ஸ் என, படம் பார்த்த ரசிகர்கள் நொந்து நூலாகி விட்டனர்.

- Advertisement -

அதனால் ஜாலியான ஒரு படம் பண்ணலாம் என்றுதான், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு வாய்ப்பளித்தார் தளபதி விஜய். ஆனால் விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஒவ்வொரு சிங்கிள் வௌியாகும் போதும், ரசிகர்கள் எதிர்பார்ப்பு மொத்தமாய் தவிடுபொடி ஆகும் அளவுக்கு ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளி வருகிறது தி கோட் படக்குழு.

இந்நிலையில், முதல் சிங்கிள் வெளியான போது விசில் போடு பாடலையும், நடனக்காட்சியையும் பார்த்து, இதுவரை சினிமாவில் விஜய் பாடிய பாடல்களிலேயே மிக சுமார் ரகம் இந்த பாடல்தான் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். இந்த படத்தின் ஹீரோ விஜய் அல்ல, பிரசாந்த் தான். அவர்தான் மாஸ் காட்டுகிறார் என்றனர்.

- Advertisement -

அதன்பிறகு 2வது சிங்கிள், சின்ன சின்ன கண்ணிலே என்ற பாடல் வெளியானது. இதை ஏஐ தொழில் நுட்பத்தில் விஜயுடன் மறைந்த பாடகி, இளையராஜா மகள் பவதாரணி குரலில் பாடப்பட்டு இருந்தது. இந்த பாடலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதில் சினேகா, விஜய், தன் மகனுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இன்று மாலை, 3வது சிங்கிள் பாடலாக கங்கை அமரன் எழுதிய ஸ்பா்க் என்ற பாடல், யுவன் சங்கர்ராஜா இசையில், அவரே பாடியும் இருக்கிறார். இந்த பாடலில் சன்னமான மீசையும், முகவாய்கட்டையில் சிறுதாடியும் வைத்தபடி டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளமைக்கால விஜயை பார்த்தால், இதுவா சார் உங்க டக்கு, என கருணாஸ் போல, அடப்பாவிகளா, இதுக்கு விஜயை இப்போ இருக்கற மாதிரியே காட்டியிருக்கலாமே… இப்படி சொதப்பிட்டீங்களே, என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எப்படி எல்லாமே நினைச்சிருந்தோம், கடைசியில் சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா… என வடிவேலு டயலாக்கை பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்