- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்... என்ன சொல்லி இருக்கார்...

விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா…

- Advertisement -

இயக்குனர் ராஜு மேனனிடம் உதவியாளராக இருந்தவர் கௌதம் மேனன். அங்கிருந்து சினிமா கற்றுக் கொண்ட அவர், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மாதவன் ரீமா சென் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் காதல் ரசம் சொட்டச் சொட்ட எடுக்கப்பட்டு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாய் அமைந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து காக்க காக்க திரைப்படத்தை எடுத்தார் கௌதம் மேனன். மின்னலேவில் காதலை சுவாரசியமாக சொல்லிவிட்டு, இதில் முழுக்க முழுக்க க்ரைம் திரில்லராக எடுத்து சபாஷ் போட வைத்தார் கௌதம் மேனன். இதன்பிறகு, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

- Advertisement -

இதை எடுத்து, 2018 ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக அவர் சூர்யாவுடன் இணைவதாக இருந்தது. அவள் கடைசி நேரத்தில் அந்த ஜோடி பிரிய, விக்ரமுடன் கைகோர்த்தார் கௌதம் மேனன்.இதில் ராதிகா, ரித்து வர்மா, திவ்யதர்ஷினி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், விநாயகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர்.

இந்த திரைப்படத்தை கௌதம் மேனனை இயக்கி தயாரித்தார். இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்து சூழலில், பொருளாதார நெருக்கடியால் துருவ நட்சத்திரம் முடங்கிப் போனது. இதன் காரணமாக கௌதம் மேனனும் நடிக்க வந்தார்.

- Advertisement -

பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர், தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டன. இதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் 24ம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகிறது.

படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் லிங்குசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, துருவ நட்சத்திரம் சிறப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக இருக்கின்றன. விநாயகன் படத்தை நிறுத்தி இருக்கிறார். விக்ரம் கூலாக வந்து போகிறார். அனைத்தும் நன்றாக உள்ளது. கௌதம் மேனனுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் கூட்டணி, வெற்றியை கொடுத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். லிங்குசாமியின் பதிவை பார்த்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்