- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தின் கதையை முதலில் நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகர் விக்ரம் பிரபு ஆகியோரிடம் இயக்குனர் பொன்ராம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டனர். அந்த சூழ்நிலையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க ஓகே சொன்ன நிலையில் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அடையாளத்தையும் பெற்று தந்தது என்று நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





