தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் கே பாக்யராஜ். இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் தன் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமை கே பாக்யராஜூக்கு மட்டுமே உண்டு.
மேலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்னுடைய கலையுலக வாரிசு என்று கே பாக்யராஜை அறிவித்தார். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் பிரதிபலிப்பாக ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளராக இயக்குனராக தன் திறமையை வெளிப்படுத்தியவர். மேலும் பாக்யா என்ற வார இதழை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியவர்.
சென்னையில் இன்று கே பாக்யராஜ் மறைந்த நிலையில் அவரது உடலுக்கு பல்வேறு திரையுலக கலைஞர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் நாளை மதியம் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் கே பாக்யராஜ் குறித்து இயக்குனர் விக்ரமன் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரது இயக்கிய முதல் படம் புது வசந்தம். முரளி சித்தாரா ஆனந்தபாபு சார்லி ராஜா சுரேஷ் ஆர்பி விஸ்வம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகுதான் தொடர்ந்து விக்ரமன் பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, நான் இயக்கிய முதல் படம் புது வசந்தம் பட பூஜைக்கு பல விஐபிகளுக்கு பத்திரிக்கை வைத்து அழைத்தேன். ஆனால் பட பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த விஐபியும் வரவில்லை. அன்று வந்த ஒரே ஒரு விஐபி இயக்குனர் கே பாக்யராஜ் சார் மட்டும்தான்.
அவருக்கு அன்று அவசர போலீஸ் 100 படம் சூட்டிங் இருந்தது. ஆனாலும் நேரில் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் கே பாக்யராஜ் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார். ஒரு புதுமுக இயக்குனரின் முதல் படம் பூஜைக்கு சென்ற நல்ல மனம் படைத்தவர் பாக்யராஜ் என்றும் விக்ரமன் நெகிழ்ந்துள்ளார்.





