- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ நட்சத்திரத்தை தொடர்ந்து தங்கலானுக்கும் வந்த சோதனை... சிக்கலில் தவிக்கும் சீயான் திரைப்படங்கள்...

துருவ நட்சத்திரத்தை தொடர்ந்து தங்கலானுக்கும் வந்த சோதனை… சிக்கலில் தவிக்கும் சீயான் திரைப்படங்கள்…

- Advertisement -

சீயான் விக்ரம் கௌதம் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அதற்கான சூட்டிங் பணிகளும் தொடங்க இருந்த சூழலில், திடீரென படத்தில் இருந்து விலகினார் சூர்யா. இதனை தொடர்ந்து கதையில் சிறிய மாற்றம் செய்து ரஜினிக்கு இந்த கதையை கூறினார் கௌதம் மேனன்.

ஆனால் அதுவும் கடைசி சிக்கலில் முடிந்ததால், விக்ரமுடன் இயக்குனர் இணைந்தார். இதன் சூட்டிங் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இதில் விக்ரமுடன் சிம்ரன், திவ்யதர்ஷினி, ராதிகா, ரித்து வர்மா, விநாயகம் என ஏராளமான நடித்தனர். போலீஸ் ஸ்டோரி ஆக வித்தியாசமான கதைகளத்தில் இந்த திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக கௌதம் மேனன் இருந்தார்.

- Advertisement -

இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரும் வெளியாகி வெளியான நிலையில் ஸ்டைலிசாக இருந்த விக்ரமை பலரும் பார்த்து ரசித்தனர். சூட்டிங் பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய போது, பொருளாதார பிரச்சினை காரணமாக துருவ விக்ரம் திரைப்படம் முடங்கியது. இதனால், ஏமாற்றமடைந்த விக்ரம் ரசிகர்கள் அந்த படம் குறித்த அப்டேட்டை தொடர்ந்து கௌதம் மேனனிடம் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் பணம் சம்பாதிப்பதற்காக பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கௌதம் மேனன். ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக முடிய, நவம்பர் மாதம் 24 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு செல்ல, மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போனது.

- Advertisement -

இதனிடையே, பா ரஞ்சித் இயக்கத்தில் இணைந்தார் விக்ரம். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, தங்கலான் என பெயரிடப்பட்டது. இதில் பசுபதி பார்வதி மேனன் மாளவிகா மோகனன் உள்ளிட்ட ஏராளமான நடித்தனர். ஆங்கிலேயர் ஆட்சி பிடியின் போது கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த கதையை இந்த படம் விவரிக்கிறது. அதுபோக சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் இந்தப் படம் எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜனவரி 26 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் ரிலீஸ் தேதியில் சிக்கல் எழுந்துள்ளது. சில காட்சிகளை மீண்டும் ரீ – சூட் செய்ய பா ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மீதம் இருப்பதாலும் படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக பேசப்படுகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்