- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இயக்குனரிடம் நானாக இருக்க போய் சமாளித்து விட்டேன்... வேறு தயாரிப்பாளர் சிக்கி இருந்தால் செத்தே...

அந்த இயக்குனரிடம் நானாக இருக்க போய் சமாளித்து விட்டேன்… வேறு தயாரிப்பாளர் சிக்கி இருந்தால் செத்தே போயிருப்பார்… பிரபல இயக்குனரை வறுத்தெடுத்த விஷால்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டதக்க வெற்றியை கொடுத்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

இந்த திரைப்படங்கள் விஷாலை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது. குறிப்பாக தாமிரபரணி திரைப்படம் அந்த தேதியிலேயே, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியது. இதன் பிறகு தன்னை ஆக்சன் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள சிவப்பதிகாரம், தோரணை, பட்டத்து யானை என பல்வேறு திரைப்படங்களில் விஷால் நடித்தார்.

ஆனால் இவை அனைத்துமே தோல்வியை கொடுக்க, சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படம் விஷாலுக்கு திருப்புமுனை திரைப்படம் ஆக அமைந்தது. சாதாரண பழி வாங்கும் கதை தான் என்றாலும், சுசீந்திரனின் அட்டகாசமான திரைக்கதையும், விஷாலின் அப்பாவித்தனமான நடிப்பும் படத்தைக் காப்பாற்றியது.

இதன்பிறகு இரும்புத்திரை உள்ளிட்ட சில வெற்றி படங்களை கொடுத்த விஷாலுக்கு, பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது தான் துப்பறிவாளன். மிஸ்கின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பாக்கியராஜ், வினய், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். கிரைம் திரில்லர் ஸ்டோரியாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்க, குற்றவாளிகளை தனது புத்தி கூர்மையால் விஷால் கண்டுபிடிக்கும் காட்சிகள் திரையரங்குகளில் எடுபட்டதால் படம் ஹிட் அடித்தது.

இதன் பிறகு துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷால் திட்டமிட்டார். அவரது தயாரிப்பில் மிஷ்கின் இயக்க, லண்டனில் திரைப்படம் உருவானது. அப்போது மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் பாதியில் நின்றது. இந்த சம்பவம் குறித்து பேசிய மிஷ்கின், விஷாலை ஒரு பொறுக்கி என்றார். இந்த வீடியோ இன்றளவும் சமூக வலைதளத்தில் டெம்ப்ளேட் ஆக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளிடம் பேசிய நடிகர் விஷால், “மீண்டும் மிஸ்கினுடன் இணைவேன் என்பது சாத்தியமில்லாத ஒன்று. லண்டனில் நடந்த சம்பவங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இதே வயதான ஒரு தயாரிப்பாளர் என்றால் மாரடைப்பால் இறந்தே போயிருப்பார். எனக்கு பல நஷ்டத்தை கொடுத்தாலும் நான் ஏதோ சமாளித்து விட்டேன். மறுபடியும் மிஷ்கின் உடன் நான் ஷூட்டிங் சென்றால் அது வேலைக்கு ஆகாது. அடுத்த வருடம் நான் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

சற்று முன்