- Advertisement -
Homeபொழுதுபோக்குரத்னம் படத்தை தொடர்ந்து விஷால் யாருடன் இணைய போகிறார் தெரியுமா... கிராமத்து களத்தில் மீண்டும் வேட்டி...

ரத்னம் படத்தை தொடர்ந்து விஷால் யாருடன் இணைய போகிறார் தெரியுமா… கிராமத்து களத்தில் மீண்டும் வேட்டி சட்டையுடன் களம் இறங்கும் நடிகர்…

- Advertisement -

நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் ரத்னம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றி திரைப்படங்களை இந்த கூட்டணி கொடுத்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதன் ட்ரெய்லரும் நன்றாக இருந்ததால், படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

 

- Advertisement -

இந்த நிலையில் ரத்னம் திரைப்படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தையே பெற்று வருகிறது. வழக்கம்போல அரைத்த மாவையே இயக்குனர் ஹரி அறைத்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஷால்.

 

- Advertisement -

அடுத்ததாக அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இதன் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. குறிப்பாக விஷால் வரும் காட்சிகளை அருமையாக எழுதியிருந்தார் மிஷ்கின். ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்ட இந்த திரைக்கதையும் நன்றாக பேசப்பட்டது.

 

இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளிநாட்டில் எடுக்கப் படக்குழு திட்டமிட்டது. அதற்கான பணிகளும் தொடங்கி சூட்டிங் நடைபெற்ற போது விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நடிகரை வெட்ட வெளியில் பொறுக்கி என்று திட்டினார் மிஸ்கின். இனிமேல் இவர்கள் சேரவே முடியாது என்பது போல் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் விட்டுப் போன படப்பிடிப்பை தொடங்க அப்போதே விஷால் திட்டமிட்டு இருந்தார்.

 

இந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். அனேகமாக இந்த வருட இறுதிக்குள், அவர் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை முடித்து விடுவார் என்று கூறப்படுகிறது. படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் எடுக்கப்பட உள்ளது.

 

இந்த நிலையில், இயக்குனர் முத்தையாவிடம் விஷால் கதை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவர் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு மருது திரைப்படம் வெளியானது. கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதால், வழக்கம்போல இதுவும் முத்தையா ஃபார்மட்டிலேயே தான் இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்