ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவோடு இணைந்து விஷால் நடிக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’ இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை ‘மினி ஸ்டூடியோ’ தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.
டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் டீசரில் ரெட்ரோ ஸ்டைலில் ஜிவி இசையமைத்திருந்தார். அதேபோல எஸ் ஜே சூர்யா டீசரில் பேசிய வசனங்கள் எல்லாம் பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அதோடு டீசரிலேயே விஷால், எஸ் ஜே சூர்யா என இருவரும் பிரமிக்க வைக்கும் அளவில் நடித்திருந்தனர்.
நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகை நயன்தாரா, பட ப்ரமோஷன்களில் பெரிதாக கலந்து கொள்வதில்லையே அது பற்றி உங்களின் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஷால், பட ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நீங்கள் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். அதில் ஒன்றும் தப்பு இல்லை என்று கூறினார்.
சமீபத்தில் கூட யோகி பாபு போன்ற சில நடிகர்கள் பட பிரமோஷன்களில் கலந்து கொள்வதே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.





