நடிகர் விஷால் தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார், துவக்கத்தில் செல்லமே படம் மூலம் அறிமுகமான அவர் திமிரு படத்தில் ஆக்சன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சண்டக்கோழி படம் அவரது சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சண்டக்கோழி படத்தில் இளம் வயது ஹீரோவாக நடிப்பில், சண்டை காட்சிகளில் அற்புதமாக தன்னை வெளிப்படுத்தி இருந்தார் விஷால். இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமி டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்கள் விஷாலுக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அதனால் முன்னணி நடிகர்களின் வரிசையில் விஷால் இடம்பிடித்தார்.
அந்த வகையில் துப்பறிவாளன், அவன் இவன், நான் சிவப்பு மனிதன், பாண்டியநாடு, மலைக்கோட்டை, சிவப்பதிகாரம், தாமிரபரணி, பூஜை என பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு விஷால் படங்கள் என்றாலே ரசிகர்கள் தெறித்துஓடும் அளவிற்கு தொடர்ந்து பிளாப் படங்களாக தந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
குறிப்பாக அவர் நடித்த லத்தி ஜார்ஜ், ஆக்சன், ஆம்பள போன்ற பல படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்கிடையே அவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்பட சங்க தயாரிப்பாளராகவும் இருந்து பல்வேறு சர்ச்சைகளை, பிரச்சனைகளை கிளப்பி தேவையின்றி விமர்சனங்களில் சிக்கினார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியுடன் காதல் கொண்டார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் விஷாலுக்கு, கடந்த ஆண்டில் வெளிவந்த ஆதித் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இப்போது விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரத்தினம். ஹரி இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில், இந்த படத்தின் வசூல் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
முதல் நாளில் 2.5 கோடியும், இரண்டாவது நாளில் 2.7 கோடியும் வசூலித்து மொத்தமே 5. 2 கோடி ரூபாய் மட்டுமே, உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மூலம் கம்பேக் கொடுத்த விஷால், மீண்டும் பழைய நிலைக்கே போய்விட்டாரா என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர். நடிகர் மற்றும் பிரபல பத்திரிகையாளர் ரங்கநாதன் வீடியோ ஒன்றில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் பற்றியும், அரசாங்கத்தை எதிர்த்தும் பேசினால் இப்படிதான் பின்விளைவுகள் இருக்கும் என்று ரத்னம் படம் பிளாப் குறித்து கலாய்த்து பேசியுள்ளார்.





