- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷால் பார்த்த தேவையில்லாத வேலை, எல்லாம் தெரிஞ்ச இவரே இப்படி நடந்துக்கலாமா? - புரட்சித் தளபதிக்கு...

விஷால் பார்த்த தேவையில்லாத வேலை, எல்லாம் தெரிஞ்ச இவரே இப்படி நடந்துக்கலாமா? – புரட்சித் தளபதிக்கு நேரமே சரியில்லையோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரிவுகள், பல்வேறு விதமான தொழில் சார்ந்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன. சில விஷயங்களை முறைப்படி செய்வதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது ஒரு படம் தயாரிப்பாளர் சொந்த செலவில் தயாரிக்கப்பட்டு, டைரக்டர் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் நடித்து உருவாக்கப்படுகிறது.

அதன்பின்பு அந்த படம் வெளியீட்டுக்கு தயாராகிறது.பின்பு அந்த படத்தை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதற்காக தயாரிப்பாளர் – விநியோகஸ்தர்களுக்கு இடையே பாலமாக செயல்பட மீடியேட்டர்கள் இருக்கின்றனர். இவர்கள்தான் புதுப்படங்களுக்காக வினியோகஸ்தர்களை, தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் செல்வார்கள். படம் வியாபாரம் குறித்து பேசி இருதரப்பில் முடித்து வைப்பார்கள். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இப்படி செயல்படும் மீடியேட்டர்களுக்கு என சங்கம் என்ற அமைப்பு உள்ளது. அவர்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இப்படி முறைப்படி ஒரு அமைப்பாக அவர்கள் செயல்பட்டு, தயாரிப்பாளர்களுக்கும் – வினியோகஸ்தர்களுக்கும் ப ஆண்டு காலமாக பாலமாக செயல்பட்டு வருகின்றனர். இதன்மூலம் இரு தரப்பினரிடம் இருந்தும் ஒரு கமிஷனை வருமானமாக பெறுகின்றனர்.

இந்நிலையில் ரத்னம் படத்தை சமீபத்தில் நடித்துள்ள நடிகர் விஷால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய மீடியேட்டர்களை அழைக்கவில்லை. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என எல்லா மாவட்டங்களுக்கும் அவரே போன் செய்து வினியோகஸ்தர்களை போனில் அழைத்து பேசியிருக்கிறார். அண்ணே இந்த படத்தை நீங்களே ரிலீஸ் பண்ணுங்க என தனது செல்வாக்கை பயன்படுத்தி, அவரே நேரடியாக களமிறங்கி படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

ரத்னம் படம் வெளியிடுவதில் மீடியேட்டர்களுக்கு வாய்ப்பே தராமல் நடிகர் விஷாலே அந்த வேலையை செய்து முடித்துள்ளார். இதை மீடியேட்டர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தமிழ் சினிமா துறையில் மீடியேட்டர்களின் பங்களிப்பு என்பது, ஒவ்வொரு படத்திலும் அவர்களுக்கான ஒரு வருமானமாக இருந்து வருகிறது.

ஆனால் இப்போது ரத்னம் படம் வாயிலாக இப்படி ஒரு தவறான நடைமுறையை கொண்டு வந்துள்ள நடிகர் விஷாலை பார்த்து, இனி அடுத்தடுத்த நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இதே போன்ற ஒரு முறையை பின்பற்றும் பட்சத்தில், அவர்களது தொழில் வாழ்க்கையே கெட்டுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மீடியேட்ர்களுக்கு சொந்தமான வாட்ச் அப் குரூப்பில் நடிகர் விஷாலை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை எதிர்காலத்தில் மீடியேட்டர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை ஏன் விஷால் உணரவில்லை என்று பலரும் கண்டபடி திட்டி வருகின்றனர்

சற்று முன்