- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி புகார் - நடிகர் சூரிக்கு செட்டில்மென்ட் தர...

விஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி புகார் – நடிகர் சூரிக்கு செட்டில்மென்ட் தர தயாரான விஷ்ணு விஷால்- திடீர் திருப்பத்துக்கு காரணம் லால் சலாம்?

- Advertisement -

நடிகர் சூரி காமெடி நடிகராக தன் சினிமா பயணத்தை துவக்கிய நிலையில், இன்று முன்னணி ஹீரோக்களி்ல் ஒருவராக வளர்ந்து வருகிறார். இப்போது அவரது கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன. இந்த அபார வளர்ச்சிக்கு ஒரு காமெடியனாக அவர் வெளிப்படுத்திய நடிப்பாற்றலும், ஒரு ஹீரோவுக்குரிய தகுதிகளை வளர்த்துக்கொண்ட அவரது தன்னம்பிக்கையும்தான். இதில் சூரியை ஹீரோவாக்கிய பெருமை, இயக்குநர் வெற்றி மாறனையே சேரும்.

வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு முன்பே தீபாவளி, காதல், வின்னர் போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக சூரி நடித்திருக்கிறார். இப்போது அந்த படங்களை பார்க்கும்போது, அட இது நம்ம சூரிதானே, என ரசிகர்கள் ஆச்சரியமாக சொல்கின்றனர். ஏனென்றால் அப்போது அவருக்கு அந்த மாதிரியாக துண்டு துண்டான கேரக்டர்கள்தான் கிடைத்தது.

- Advertisement -

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சவாலில் அவரது நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் காமெடியனாக திறமை காட்டினார் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த படங்களில், அவர்களது காமெடி காம்பினேஷன்
படத்துக்கு மேலும் வலிமை சேர்த்தது. அடுத்து ரஜினி, விஜய், சூர்யா, விஷ்ணு விஷால், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுடன் நண்பனாக நடித்து முன்னணிக்கு வந்தார் சூரி.

இதில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் சூரி நடித்த படங்கள் பலவும் நல்ல வெற்றிப் படங்களாக அமைந்தன. குறிப்பாக குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடிக்குழு, கதாநாயகன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்கள் விஷ்ணு விஷால், சூரி காமெடி காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆனது. இதனால் விஷ்ணு விஷாலுக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை முன்னாள் போலீஸ் ஏடிஜிபி அதிகாரியான ரமேஷ் குடவாலா ஆகியோர் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரி போலீசில் புகார் செய்தார். ஒன்றரை கோடி ரூபாய் வரை சூரியை அவர்கள் ஏமாற்றி விட்டதாக புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் காமெடியில் இருந்து மாறி, கதாநாயகனாக மாறியுள்ள சூரியின் லைன் அப், வேற லெவலில் இப்போது இருந்து வருகிறது. 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆனால் விஷ்ணு விஷால் திரைப்பயணம் சரிவை சந்தித்துள்ளது. விஷ்ணு விஷால் நடித்த லால் சலாமும் பிளாப் ஆகி விட்டது. அதனால் மீண்டும் சூரியுடன் கைகோர்த்தால், சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளதால், மோசடி செய்த பணத்தை புல் செட்டில்மென்ட் செய்வதாக விஷ்ணு விஷால் தரப்பில் இருந்து சூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூரி தரப்பில் இருந்து எந்த மூவ்மென்ட்டும் இதுவரை இல்லை.

- Advertisement -

சற்று முன்