- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 பவுன்சர்களுடன் படப்பிடிப்பு தளத்துக்குள் மாஸ் காட்டி நுழைந்த நடிகர் விஷ்ணு விஷால், அங்கே இருந்த...

20 பவுன்சர்களுடன் படப்பிடிப்பு தளத்துக்குள் மாஸ் காட்டி நுழைந்த நடிகர் விஷ்ணு விஷால், அங்கே இருந்த பிரபல நடிகர் – அரண்டு போய் அவர் என்ன செய்தார் தெரியுமா?

- Advertisement -

சினிமாவில் அப்பாவியாக, சாதாரண மனிதராக தங்களை காட்டிக் கொள்ளும் பல நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களது வாழ்க்கையே ஆடம்பரமாக, பெரிய அலப்பரையாக இருக்கும். குறிப்பாக பொது இடங்களில், படப்பிடிப்பு தளங்களில் அவர்கள் கெத்து காட்டி பந்தா செய்வார்கள்.

நடிகர் விஷ்ணு விஷால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னும் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகராக தான் இருக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக் கூட்டம், ராட்சசன் போன்ற சில படங்களே அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன. மற்றபடி இப்போதும் அவர் பெரிய அளவில் புகழ் பெறவில்லை.

- Advertisement -

ஆனால் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது நடிகர் விஷ்ணு விஷால் செய்யும் அலப்பறை பெரிய அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக அவுட்டோர் ஷூட்டிங் செல்லும் போது ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா போன்றவர்கள் பெரிய அளவில் பாதுகாப்பாக செல்வார்கள். ஏனெனில் அங்கு அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டுவிடும்.

அதற்காக பவுன்சர்களை அழைத்துச் சென்று கூட்ட நெரிசலில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொள்ளாதபடி தவிர்க்க, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம் என்பதாக தான் இருக்கிறது. ஏனெனில் சில மூர்க்கத்தனமான ரசிகர்கள், அவர்களை கை பிடித்து இழுப்பது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற வேண்டாத செயல்களில் ஈடுபட்டு அவர்களை வெறுப்பேற்றி விடுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இந்த படத்தை லைகா புரடக்சன் தயாரித்திருந்தது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

சென்னையில் லால் சலாம் படப்பிடிப்பு ஸ்டுடியோ ஒன்றில் நடந்த போது, 20 பவுன்சர்களுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கான காட்சியில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் டிரைவர், அவரது உதவியாளர் மட்டுமே இருந்துள்ளனர். அதைப் பார்த்த சிலர், சூப்பர் ஸ்டாரே பாதுகாப்புக்கு பவுன்சர்களை அழைத்துவரவில்லை. இவர் 20 பேரோடு வந்திருக்காரே, என நக்கலாக பேசியிருக்கின்றனர். ரஜினியை பார்த்து மிரண்டு போன விஷ்ணு விஷால், 16 பேரை வெளியே அனுப்பி விட்டு அப்போதும் 4 பவுன்சர்களுடன் உள்ளே சென்று ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டதாக வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்