நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக அவரது படங்களில் ராட்சசன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. க்ரைம் த்ரில்லர் திகில் படமான இதில் பள்ளி மாணவிகளை கடத்திக்கொல்லும் சைக்கோ கொலைகாரனை பிடிப்பதுதான் படத்தின் கதை.
வெண்ணிலா கபடிக்குழு, கட்டாகுஸ்தி, குள்ளநரிக்கூட்டம், மாவீரன் கிட்டு, பலே பாண்டியா, கதாநாயகன், முண்டாசுப்பட்டி, வேலையின்னு வந்துட்டா வேலைக்காரன், இன்று நேற்று நாளை, எப்ஐஆர், காடன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால்.
இவருக்கு காமெடி படங்கள் வெற்றிப்படங்களாக அமைகின்றன. குறிப்பாக கதாநாயகன், முண்டாசுப்பட்டி, சிலுக்குவார்ப்படி சிங்கம், வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன், குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்கள் கைகொடுத்தன. எனினும் ராட்சசன் போன்று பெரிய அளவில் அவரது படங்கள் பேசப்படவில்லை. ஆனால் நல்ல நடிகராக அவர் நிரூபித்திருக்கிறார்.
இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்த லால் சலாம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே லால் சலாம் படத்தில் புதிய பஞ்சாயத்து ஒன்றை கிளப்பி இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். அதாவது இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கேரக்டரில் நடிக்கிறார். அவரது மகனாக விக்ராந்த் நடிக்கிறார். இதில் அப்பா, மகன் என ரஜினிகாந்துடன் விக்ராந்த் வரும் காட்சிகள் அதிகமாக வருகின்றன.
இதையடுத்து தனக்கான முக்கியத்துவம் லால் சலாம் படத்தில் குறைந்துவிட்டதாகவும் விக்ராந்த் வருவது போல, தனக்கும் படத்தில் அதிக காட்சிகள் வரும்படி செய்ய வேண்டும். அல்லது விக்ராந்த் வரும் காட்சிகளை கணிசமாக குறைக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால். விக்ராந்த் அதிக படங்களில் நடிக்காவர். அவருக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் இருந்தாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பது நல்ல பண்பு. ஏற்கனவே பிரபலமாக உள்ள விஷ்ணு விஷால், இப்படி பிரச்னை செய்கிறாரே என்றுதான் இந்த விவகாரத்தில் விமர்சனம் எழுந்து வருகிறது.





