நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத் குமார் போன்றவர்கள் படங்களை இயக்க இயக்குனர்கள் தவம் இருக்கின்றனர். பல தயாரிப்பாளர்களும், தங்களுக்கு இவர்களில் யாரேனும் ஒருவர் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்று அந்த டாப் ஸ்டார் நடிகர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அஜித்குமார் நடித்த 60க்கும் மேற்பட்ட படங்களில் சில படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதில் ஒரு முக்கியமான படமாக இருந்தது பில்லா. இந்த படம் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன் நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அஜித்குமாரை நடிக்குமாறு கூறியதே நடிகர் ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ரஜினி இதுவரை அவர் நடித்த படங்களில் இரண்டாம் பாகத்தில் நடித்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே அப்போது பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித்தை நடிக்குமாறு ரஜினியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த பில்லா ரீமேக் படத்தை இயக்கியவர் டைரக்டர் விஷ்ணுவர்தன். ஏற்கனவே தமிழில் சில முக்கிய வெற்றி படங்களை கொடுத்தவர். பில்லா படத்தையும் சிறப்பாக தந்திருந்தார். அஜித் குமார் சினிமா பயணத்தில் பில்லா படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அஜித்குமார் துணிவு படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிக்க ஆயத்தமானார். அப்போது விக்னேஷ் சிவன் அஜீத் படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், கதை பிடிக்காததால் அவரை வெளியேற்றிவிட்டார் அஜீத்குமார்.
அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஷ்ணுவர்தனுக்கு அளித்தார். ஆனால் விஷ்ணுவர்தன், அஜித்குமார் படத்தை இயக்க மறுத்துவிட்டார். அப்போது பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பை விஷ்ணுவர்தன் பெற்று இருந்தார். இதனால் தான் அஜீத்குமாரே அழைத்தும் விஷ்ணுவர்தன் வராதது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. அதன் பிறகு தான் மகிழ் திருமேனியை அழைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பு அஜித்குமார் கொடுத்தார்.
ஹாலிவுட் நடிகர் சல்மான் கால்ஷீட்டுக்காக விஷ்ணுவர்தன் காத்திருந்த நிலையில், இப்போது சல்மான் கான் ஏஆர் முருகதாஸின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். அதாவது விஷ்ணுவர்தனை கழட்டி விட்டுவிட்டார். இந்நிலையில் அஜித்குமார் படத்தை இயக்க விஷ்ணுவர்தனை தொடர்பு கொண்ட போது, விஷ்ணுவர்தன் கண்டு கொள்ளவில்லை. இப்படி சல்மான் கானை நம்பி அஜித் குமார் படம் இயக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்று இப்போது புலம்பிக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் விஷ்ணுவர்தன்





