- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படங்களை இயக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல இயக்குனர், இப்போ புலம்பி என்ன ப்ரோ...

அஜீத்குமார் படங்களை இயக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல இயக்குனர், இப்போ புலம்பி என்ன ப்ரோ பண்றது? – கலாய்க்கும் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

சினிமாவில் எப்போதும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் இமேஜ் ஒரே படத்தில் கிடுகிடு என வேற லெவலுக்கு சென்றுவிடும். அதனால் டாப் ஸ்டார் நடிகர்களை இயக்க எப்போதுமே இயக்குனர்கள் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டுவது வழக்கம். அப்போதுதான் குறுகிய காலத்தில் அவர்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைய முடியும்.

குறிப்பாக தமிழில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், இந்தியில் ஷாருக்கான் சல்மான்கான், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, வெங்கடேஷ், அல்லு அர்ஜூன் போன்றவர்களின் படங்களை இயக்க கடும் போட்டி இயக்குனர்களுக்குள் நிலவுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் அஜீத்குமார். டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அவர் இப்போது விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற 2 படங்களில் நடித்து வருகிறார். அஜீத்குமார் பிறந்த நாளான வருகிற 2025ம் ஆண்டு மே 1ம் தேதி குட்பேட் அக்லி திரைக்கு வர உள்ளது, விடாமுயற்சி படம் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நடிகர் அஜீத்குமார் நாயகனாக நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக அஜீத்குமாருக்கு அமைந்தன. 35 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், தற்போது நடிகர் முரளியின் இளைய மகன், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் நேசிப்பாயா என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத் படம் குறித்து பேசி உள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், நடிகர் அஜீத்குமாருடன் இரண்டு, மூன்று முறை மீண்டும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டேன். ஒருமுறை அஜீத்குமார் என்னை அழைத்தபோது சல்மான்கான் நடிக்கும் படத்தை எடுக்கும் சூழலில் நான் இருந்தேன். அதனால் பில்லா 3 படத்தை எடுக்க எனக்கு அழைப்பு வந்தும் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜீத்குமாரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்