யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் விஜே சித்து. பல சேனல்களில் அவரது சேட்டையான வீடியோக்கள் பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்தன. டிவி சேனல்களிலும் அவர் ஷோக்களில் கலந்துக்கொண்டு மக்களின் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். குறிப்பாக டிராகன் படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வரவேற்றனர். படம் வெளியான சில வாரங்களில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சிம்பு நடிக்கும் அவரது எஸ்டிஆர் 51 படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். அதே போல் நடிகர் பிரதீப் ரங்கநாதனும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்த படத்தில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அதே போல் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நண்பனாக நெருக்கமான கேரக்டரில் விஜே சித்து நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்தில் பல காட்சிகளில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து விஜே சித்து இயக்குனராக உருவெடுத்து இருக்கிறார். அவரே இயக்கி அவரே நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் அந்த படம் குறித்த அறிமுக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. யூடியூப்பில் 8 மில்லியன் பார்வையாளர்கள் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பார்வையாளர்கள் என 24 மணி நேரத்தில் சாதனை படைத்தது. ஒரு யூடியூப் பிரபலம் டைரக்ட் செய்து நடிப்பதால் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விஜே சித்து இயக்கி அவரே நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் காதல் சார்ந்த எந்த விஷயங்களுமே இல்லை. அதாவது இந்த படத்தில் துளியளவு கூட காதல் என்ற விஷயத்தை கொண்டு வராமல் கதை திரைக்கதை வசனத்தை உருவாக்கி ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார் விஜே சித்து. இதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். இன்றைய சூழலில் காதல் இல்லாத ஒரு படம் என்றால் ரசிகர்கள் ஏற்பார்களா, தயவு செய்து படத்தில் காதல் காட்சிகள், காதல் பாடல்களை கொண்டுவாங்க என்று விஜே சித்துவுக்கு பிடிவாதமாக அட்வைஸ் செய்திருக்கிறார்.





