- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த திடீர் வரவேற்பு, தினமும் ரூ. 2 லட்சம் சம்பளம்...

தமிழ் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த திடீர் வரவேற்பு, தினமும் ரூ. 2 லட்சம் சம்பளம் – இங்க என்ன சொல்லுது, வசனம் அங்கேயும் பிடிச்சுப் போச்சா?

- Advertisement -

தமிழில் எடுக்கும் படங்கள் நல்ல வெற்றி பெற்று விட்டால், பெரும்பாலும் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள், தமிழில் எடுக்கும்போதே பான் இந்தியா படங்களாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிறமொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

தெலுங்கில் எடுக்கப்படும் பல படங்கள், தமிழில் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக பாகுபலி படத்தை சொல்லலாம். பாகுபலி படம், மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. அதனால், தெலுங்கு படங்களை தமிழில் வெளியிட அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. ஏனெனில் தமிழில் வெளியிட்டால் கொள்ளை லாபம் கிடைக்கிறது.

அதுபோல், சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரியவெற்றியை பெற்ற படம் ஜெயிலர். ரஜினி நடிப்பில் 700 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் படமும் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது. இதில் சைக்காலஜி டாக்டராக நடிகர் விடிவி கணேஷ் நடித்திருந்தார். விடிவி கணேஷ் நடிப்பு, தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மட்டுமே படங்களில் வாய்ப்பு நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், இப்போது விடிவி கணேஷூக்கு, தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குவிகிறது. இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படத்திலும் விடிவி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்கள் போதிய வரவேற்பும், வாய்ப்பும் கொடுக்காவிட்டாலும் தமிழ் படங்களில் தெலுங்கில் ரிலீஸ் ஆகி, விடிவி கணேஷூக்கு பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துவிட்டது. தெலுங்கு படங்களில் நடிக்க தினமும் ரூ. 2 லட்சம் சம்பளம் வாங்குகிறார் விடிவி கணேஷ். அந்த அளவுக்கு அவருக்கு தெலுங்கு சினிமா உலகம் பலத்த வரவேற்பை தந்திருக்கிறது.

ஆனால், இங்க என்ன சொல்லுது என்று சோடாக்குண்டு தொண்டையில் மாட்டியது போல, ஒரு மாதிரியான அவஸ்தையில் விடிவி கணேஷ் கரகரப்பான குரலில் பேசித்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தெலுங்கிலும் அதே போல சொந்த குரலில் பேசுகிறாரா அல்லது தெலுங்கு மொழியில் டப்பிங் குரலில் பேசுகிறாரா எனத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் விடிவி கணேஷ் தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகி விட்டார் என்பதுதான் இதில் ஹைலைட்.

சற்று முன்