- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்க்கிங் பட பாணியில் சீரியல் நடிகர் பிர்லா போஸ் வீட்டில் நடந்த சம்பவம், போலீசார் விசாரணை...

பார்க்கிங் பட பாணியில் சீரியல் நடிகர் பிர்லா போஸ் வீட்டில் நடந்த சம்பவம், போலீசார் விசாரணை – அந்த எம்எஸ் பாஸ்கர் கேரக்டர் யாருன்னு தெரியலையே?

- Advertisement -

கடந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியான படம் பார்க்கிங். தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோன்ற அற்புதமான சில படங்களும் வெளிவருவது உண்டு. காக்கா முட்டை, குட் நைட், போர்த்தொழில், கிடா போன்ற படங்களின் வரிசையாக அமைந்த ஒரு நல்ல படமாக பார்க்கிங் படம் இருந்தது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றது.

ஒரு காம்பவுண்டில் கீழும், மேலும் 2 போர்ஷன்களில் வசிக்கும் இருவர், வீட்டு வாசலில் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் பிரச்னை தான் படத்தின் மையக்கரு. பைக் வைத்துள்ள கீழ்வீட்டு எம்எஸ் பாஸ்கர், மேல் வீட்டு பையன் ஹரீஷ் கல்யாண் காரை நிறுத்துவதால், சில பாதிப்புகளை சந்திக்கிறார்.

- Advertisement -

இந்த பிரச்னை வீட்டு ஓனரிடம் போக, அவர் காரை நிறுத்திக்கட்டும். பைக் ஓரமாக நிறுத்திக்குங்க என்க, கோபப்பட்ட எம்எஸ் பாஸ்கர், அவரும் புதிய கார் வாங்கி வருகிறார். ஆக வீட்டுக்குள் யார் காரை நிறுத்துவது என்பதுதான் பிரச்னை. அந்த காட்சிகளை மையப்படுத்தி தொடர்ந்து அடுத்தடுத்த நடக்கும் சம்பவங்கள், கடைசியில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலைக்கு சென்று விடுகிறது.

வீடுகளில் இந்த வாகனங்கள் நிறுத்துவதில் உள்ள பிரச்னை, அன்றாட வாழ்க்கையில் பல மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்றாக தான் இருக்கிறது. அதுவும் பல பேர் ஒரு காம்பவுண்டில் வசிக்கும்போது தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்வதில் தகராறு நடப்பதும் சகஜமாகி விட்டது. அதனால்தான் இந்த படமும் பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றது.

- Advertisement -

அதே போன்ற சம்பவம் பிரபல சீரியல் நடிகர் பிர்லா போஸ் வீட்டிலும் நடந்துள்ளது. இவர் சீரியல்களில் மட்டுமின்றி பல படங்களிலும் குணச்சித்திர வேடங்களில், சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். சென்னையில் அபார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் பிர்லா போஸ் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அவரது மகனை கடத்திச் சென்ற ஒரு கும்பல், ஒரு இடத்தில் அடைத்து வைத்து தாக்கி, துன்புறுத்தி பின் விடுவித்துள்ளது.

இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பிர்லா போஸ் அந்த அபார்ட்மெண்டில் பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு காரை எடுத்த மற்றொரு வாலிபர், பிர்லா போஸ் கார் மீது மோதி சேதப்படுத்தி உள்ளார். இதனால் அவருக்கும், பிர்லா போஸ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பிர்லா போஸை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் தனியாக இருந்த அவரது மகனை, 10 பேருடன் சேர்ந்து கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்