கடந்த 2022ம் ஆண்டில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியானது. அந்த படத்தின் பிரமோசனுக்காக நடிகர் விஜய் பங்கேற்ற ஒரு நேர்காணலில் பேசியதாவது, ஒரு அழகான மரத்தை பார்க்கும்போது அதன் பூக்களை ரசிக்கிறோம். ஆனால் வேர்களின் உழைப்பை கவனிப்பதில்லை. தந்தைகள் அப்படி தான். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தின் வேர்கள்.
நாம் மகனாக இருக்கும்போது அதை உணர்வதில்லை. நாம் தந்தையாக மாறும் போதுதான் அதை உணர்கிறோம். யாராவது நம்மிடம் உள்ள ஒரு நல்ல குணத்தை பாராட்டினால் அது பொதுவாக அவர்களது தந்தையிடமிருந்து வந்ததாகவே இருக்கும். எளிமையாக சொன்னால் கடவுளுக்கும் தந்தைக்கு உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் கடவுளை நம்மால் பார்க்க முடியாது.
இதை நான் என் தந்தையைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. பொதுவாக தந்தைகளைப் பற்றி சொல்கிறேன். கடவுளை நேரில் நாம் காண முடியாது. ஆனால் தந்தையை காணலாம் என்று விஜய் கூறியிருந்தார். மேலும் அந்த நேர்காணலில் நடிகர் விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
உங்கள் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக விரும்புகிறாரா என்று விஜயிடம் கேட்டபோது விஜய் கூறியதாவது, அவரது மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எனது மகனை நடிக்குமாறு நான் ஒருபோதும் வற்புறுத்தியதில்லை. நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். இது முற்றிலும் அவருடைய விருப்பம். அவருக்கு எனது ஆதரவு தேவை என்று அவர் கருதினால் நான் அவருக்கு ஆதரவளிப்பேன்.
எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. இதைத்தான் செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு கட்டளையிடுவதில்லை. சஞ்சயின் அறிமுகத்திற்காக பல இயக்குனர்கள் என்னை அணுகினார்கள். ஆனால் முடிவை எப்போதும் அவரிடமே விட்டுவிட்டேன். கேமராவுக்கு பின்னால் இருக்க வேண்டுமா? அல்லது கேமராவுக்கு முன்னால் இருக்க வேண்டுமா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
அவர் எதை தேர்ந்தெடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று அந்த நேர்காணலில் விஜய் கூறியிருக்கிறார். அதே போல் ஜேசன் சஞ்சய் இப்போது கேமராவுக்கு பின்னால் அதாவது இயக்குனராக தான் இருக்கிறார். அப்பா தமிழக முதல்வரான நிலையில் மகன் திரைப்பட இயக்குனராக சிக்மா என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





