- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப், இட்லி கடை படங்களை தொடர்ந்து கூலி திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் நாள் குறிச்சாச்சாம்... சூப்பரான...

தக் லைப், இட்லி கடை படங்களை தொடர்ந்து கூலி திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் நாள் குறிச்சாச்சாம்… சூப்பரான தேதியில் அதிரடியாக முடிவெடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

லியோ திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கி அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்று இருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினியுடன் சேர்ந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

- Advertisement -

தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவது அதன் முதல் போஸ்டரிலேயே உறுதியானது. பிறகு படத்திற்கான அறிவிப்பு வீடியோவையும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதில் ரஜினிகாந்த் தனது பழைய பட டயலாக்கை கூறிக் கொண்டே, சண்டையிடுவது ரசிக்கும் வகையில் இருந்தது.

 

- Advertisement -

கூலி திரைப்படத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் மற்றொரு விஷயம் படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பு தான். இதில் சத்யராஜ் ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கிறார். வில்லனாக வந்து மிரட்டுகிறார் நாகர்ஜூனா. அவருக்கு சைமன் என்னும் கதாபாத்திரத்தை லோகேஷ் கொடுத்து இருக்கிறார்.

 

இதுபோக மலையாளத்திலிருந்து சோபின் சபிர், கர்நாடகாவில் இருந்து உபேந்திரா ஆகியோரையும் இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். கமல்ஹாசனின் மகளான சுருதிஹாசனும் இந்த திரைப்படத்தில் இருக்கிறார். இதில் ரஜினிக்கு தேவா எனும் கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

 

இதன் படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிறகு அதனை, விசாகப்பட்டினத்திற்கு மாற்றினார்கள். அங்கு பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது படக்குழு சென்னைக்கு மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட படத்தின் 60% பணிகள் முடிவடைந்து விட்டதாம்.

 

இந்த நிலையில் கூலி திரைப்படத்தை அடுத்த ஆண்டு மே ஒன்றாம் தேதி வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறாராம். தொடர் விடுமுறை வருவதால் அந்த தேதியை லாக் செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் தனுஷின் இட்லி கடை படமும், ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

சற்று முன்