- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை பேசுறதுக்கு விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? கண்டபடி கேட்ட முக்கிய பிரபலம்

இதை பேசுறதுக்கு விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? கண்டபடி கேட்ட முக்கிய பிரபலம்

- Advertisement -

இந்த ஆண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையையும் சான்றிதழ்களையும் தனது கைகளாலேயே வழங்க நடிகர் விஜய் விழா ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி அந்த விழா கடந்த 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரங்களுக்கு மேல் உட்காராமல் நின்றுகொண்டே மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ்களையும் அளித்தார். மேலும் விழா தொடங்கியபோது மாணவர்களிடம் உரையாடிய அவர் பல அறிவுரைகளையும் வழங்கினார்.

- Advertisement -

“பள்ளி புத்தக்கங்களையும் தாண்டி பல தலைவர்களை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரை போன்ற தலைவர்கள் குறித்து படியுங்கள்” என கூறினார்.

“பொது தேர்வில் உங்கள் பகுதிகளில் தோற்றுப்போன மாணவர்களிடம் அரவணைப்பாக பேசுங்கள்” எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் “காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க, ஆனா படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது” என்ற அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தையும் அவர் பேசி இருந்தார்.

- Advertisement -

இவ்வாறு மாணவர்களிடம் பல விஷயங்கள் ஊக்குவிக்கும் வகையில் பேசிய விஜய், “வருங்கால வாக்காளர்கள் நீங்கள். நாளைய தலைவர்களை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். ஓட்டு போடுவதற்கு காசு வாங்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும் இதை சொல்லுங்கள். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாயை ஒரு அரசியல்வாதி செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று பாருங்கள்” என கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், “ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் ஒருவர் செலவு செய்கிறார் என்றால் அவர் இதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து வைத்திருந்தால் இந்த செல்வை பண்ண முடியும்? என விஜய் கேள்வி எழுப்புகிறார்.

இந்த கேள்வியை கேட்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது. விஜய்யின் படம் திரையரங்கில் வெளியாகும்போது 1000 ரூபாய் 2000 ரூபாய்க்கு எல்லாம் டிக்கெட் விற்கும்போது, ஓட்டுக்கு காசு வாங்காதீங்க என்று சொல்வதை போல், அரசாங்கம் நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு அதிகமாக காசு கொடுத்து படத்தை பார்க்காதீர்கள் என்ற விஷயத்தையும் விஜய் கூறியிருந்தார் என்றால் புரட்சியை நோக்கி விஜய் நகர்ந்து வருகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விஜய் அதில் சுயநலமாக இருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்