- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவே மறந்து போய் விட்டதா? ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 3 படம்...

தமிழ் சினிமாவே மறந்து போய் விட்டதா? ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 3 படம் என்னதான் ஆச்சு? – ரசிகர்கள் அப்செட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனராக நல்ல படைப்பாளியாக விளங்கியவர் ஷங்கர். ஜெண்டில் மேன் படம் துவங்கி கேம் சேஞ்சர் வரை மொத்தம் 15 படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார். இதில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என 2 படங்களை தவிர ஷங்கர் இயக்கிய மற்ற படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெற்றவை.

அதிலும் குறிப்பாக சிவாஜி எந்திரன் அந்நியன் இந்தியன் ரோபோ 2.0 ஜீன்ஸ் முதல்வன் காதலன் நண்பன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்த படங்களாக இருந்தன. குறிப்பாக 1996ம் ஆண்டில் வெளிவந்த கமல் 2 வேடங்களில் நடித்த இந்தியன் படம் ஷங்கருக்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த சேனாபதி கேரக்டரில் நடித்த இந்தியன் தாத்தா கமலுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. ஏற்கனவே மூன்றாம் பிறை நாயகன் படங்களுக்காக கமல் 2 முறை தேசிய விருது பெற்ற நிலையில் இந்தியன் படம் 3வது தேசிய விருதை கமலுக்கு பெற்றுத் தந்தது. அதனால் இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக்க கமல் மற்றும் ஷங்கர் திட்டமிட்டு படத்தை உருவாக்கினர்.

இந்தியன் படத்துக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து கடந்த 2024ம் ஆண்டில் இந்தியன் 2 படம் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர முதல் பாகத்தில் நடித்த முக்கிய நடிகர் நடிகைகள் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பாராமல் படுதோல்வி அடைந்தது. இந்தியன் 2ம் பாகத்தின் முடிவில் இந்தியன் 3ம் பாகத்தின் டிரெய்லர் காட்சிகள் இருந்தன.

- Advertisement -

அடுத்த சில மாதங்களில் அல்லது அடுத்த 2025ம் ஆண்டில் இந்தியன் 3 வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்தியன் 2 வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியன் 3 படம் குறித்த எந்த தகவலும் இல்லை. இந்தியன் 3 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரடக்சன்ஸ், படத்தின் ஹீரோ கமல்ஹாசன் படத்தின் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியன் 3 படத்தையே மறந்து போய்விட்டார்கள்.

இந்தியன் 3 படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. ஏற்கனவே இந்தியன் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்