சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான டைட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இதனை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்தார்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி அண்மையில் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையைக் கூற அது நடிகருக்கு பிடித்து போனதால், இருவரும் இணைய முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு மார்ச் மாதம் வரை கால்ஷீட் இல்லையாம். இதனால், படப்பிடிப்பை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேசமயம், இந்த இடைவேளையில் தனது 25வது திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார் சிவகார்த்திகேயன்.
இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்த சுதா கொங்கரா தான் இந்த படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே, அவர் சூர்யாவை வைத்து புறநானூறு என்னும் திரைப்படத்தை எடுக்க இருந்தார். இதில் சூர்யா உடன், துல்கர் சல்மான் விஜய்வர்மா நஸ்ரியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. சூர்யாவின் 2d நிறுவனமே இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புறநானூறு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் அதே கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி ஓகே வாங்கி இருக்கிறார் சுதா கொங்கரா. இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். அதர்வா, தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
அண்மையில் இதற்கான பட பூஜை நடைபெற்றது. ஆனால் அதில் புறநானூறு என டைட்டில் வைக்கவில்லை. இதற்குக் காரணம் சூர்யாவின் 2டி நிறுவனத்திடம் இருந்து அதற்கான என் ஒ சி கிடைக்கவில்லையாம். இதனால் படத்திற்கு வேறு டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த திரைப்படத்திற்காக 2டி நிறுவனம், 12 கோடி ரூபாய் செலவு செய்து இருந்ததாம். இதனை சுதா கொங்கரா செலுத்துவாரா அல்லது தயாரிப்பு நிறுவனம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





