- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூரியின் இரண்டு திரைப்படங்கள்... டாப் கியரில் செல்லும் நடிகர்...

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூரியின் இரண்டு திரைப்படங்கள்… டாப் கியரில் செல்லும் நடிகர்…

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இடம் பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் ஃபேமஸ் ஆனவர் நடிகர் சூரி. அதற்கு முன்பு சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது வெண்ணிலா கபடி குழு திரைப்படம். இதன்மூலம் நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்துக்கு சென்ற சூரி, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து செய்த சேட்டைகள் திரையரங்குகளில் காமெடி சரவெடியாக அமைந்தன. இப்படி தொடர்ந்து நகைச்சுவையில் கலக்கி வந்த சூரிக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. அவரின் காமெடிகள் ஒரே விதமாக இருப்பதாகவும், ஆங்கிலத்தை தவறுதலாக பேசி அதன் மூலம் காமெடி செய்துவிடலாம் என்று நம்புவதாகவும் பலர் விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

குறிப்பாக அவர் காமெடி வரவர எடுபடவில்லை என்று சமூக வலைதளத்தில் சூரியை கிண்டல் அடிக்கவும் ஆரம்பித்தனர். இப்படியான சூழலில் தான் அவருக்கு, வெற்றிமாறன் அற்புதமான ஒரு வாய்ப்பை கொடுத்தார். தனது விடுதலை படத்தில் முக்கியமான ரோலில் அவரை நடிக்க வைத்தார் வெற்றிமாறன். கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சூரி, விடுதலை திரைப்படத்தில் குமரேசன் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்தார்.

அந்த சூரியா இப்படி நடித்திருப்பது என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பால் அவர் அடுத்தடுத்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இதில் அனைவரும் கவனிக்கும் திரைப்படம் கொட்டு காளி.

- Advertisement -

கூழாங்கல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பேசப்பட்ட பி எஸ் வினோத் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இதேபோல் வெற்றிமாறன் தயாரிக்கும் கருடன் திரைப்படத்திலும் சூரிக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சசிகுமாரும் வருகிறார். கருடன் படத்திற்கான அறிவிப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதேபோல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திலும் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலியும், கதாநாயகியாக அஞ்சலியும் நடித்துள்ளனர். இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் விடுதலை 2 மற்றும் ஏழ்கடல் ஏழுமலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்