- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் பிரபாகரன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகான் -...

கேப்டன் பிரபாகரன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் மன்சூர் அலிகான் – அப்போ வீரபத்ரனை மீண்டும் ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு படம் மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும். அவர்களது சினிமா பயணத்தில் மிக முக்கியமான வெற்றி படமாக அது அமையும். அந்த வகையில் புரட்சித் தலைவர் நடிகர் எம்ஜிஆருக்கு ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களை சொல்வார்கள்.

அதேபோல் நடிகர் சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், கர்ணன், வசந்த மாளிகை போன்ற படங்களை சொல்வதுண்டு. அதேபோல் நடிகர் ரஜினிக்கு பாட்ஷா, கமலுக்கு தேவர் மகன், சத்யராஜூக்கு அமைதிப்படை சரத்குமாருக்கு நாட்டாமை அர்ஜூனனுக்கு முதல்வன், விஜய்க்கு கில்லி அஜீத்துக்கு காதல் கோட்டை போல நடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் என்று சொல்வார்கள்.

- Advertisement -

கேப்டன் பிரபாகரன் படம்தான் விஜயகாந்த் நடித்த படங்களில், ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பையும், கொண்டாட்டத்தையும் பெற்ற படம். சின்ன கவுண்டர் புலன் விசாரணை ஊமை விழிகள் மாநகர காவல் போன்ற படங்களும் விஜயகாந்த் மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் நடித்த படங்களின் கேப்டன் பிரபாகரன் படம் 2ம் பாகமாக வெளிவர வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கேப்டன் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில் கேப்டன் பிரபாகரன் படம் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு மாஸ் ஹிட் படமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. ஆனால் 2ம் பாகம் படத்தில் நடிக்க விஜயகாந்த் தற்போது நம்மிடையே இல்லை என்றாலும், மன்சூர் அலிகான் அதுகுறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டை தற்போது தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம்தான் கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்த் நடித்த 100வது படம் என்பதும், இது மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு தான் விஜயகாந்தை அனைவருமே தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்க தொடங்கினார்கள். இந்த படத்தில் வீரபத்திரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். மன்சூர் அலிகானுக்கும் அவரது திரைப்பட பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது கேப்டன் பிரபாகரன் படத்தின் 2ம் பாகம் குறித்த ஒரு தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார். அதில் குதிரை மீது சவாரி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மன்சூர் அலிகான், கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 நான் ரெடி, சண்முக பாண்டியன் ரெடியா? வாங்க… ஆனா அந்த படத்தை ஆர்கே செல்வமணி மட்டும்தான் இயக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்