ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் பின்பகுதியில் ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். சில வாசகங்கள் தன்னம்பிக்கை தரும் விஷயங்களை சொல்லி இருக்கும். சில வாசகங்கள் தலைக்கணம் கொண்டு ஆடக் கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கும். குறிப்பாக இந்த வாசகம் மிக பிரபலம், அதாவது எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே என்பதுதான் அது.
விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிறகு, சிலம்பரசன் கொடுத்த வாய்ப்பால், அவரது நட்பால் தமிழ் சினிமாவுக்குள் காமெடி நடிகராக நுழைந்தவர் சந்தானம். அவரது டைமிங் காமெடி வேற லெவலில் இருந்து, முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். பிறகு ஹீரோவாகி, பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
அதே போல், தமிழ் சினிமாவில் துணை நடிகர்களில் ஒருவராக அறிமுகமாகி பிறகு பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சூரி. பிறகு சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், விமல், விஷால் போன்றவர்கள் கூட்டணியில் காமெடி செய்து, ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்த சூரி, இப்போது விடுதலை, கருடன் என ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சந்தானம், சூரியை போலவே தனது காமெடி நடிப்பாலும், டைமிங் டயலாக் மூலமாகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் யோகி பாபு. அவரது தலைமுடியும், முகமும், உருவத்தோற்றமும் வித்யாசமாக இருக்க, அதுவே அவர் சினிமாவில் நடிக்க பிளஸ் பாயிண்டுகளாக இருந்தது. அதனால் அடுத்தடுத்த படங்களில் நடித்து யோகி பாபுவும் காமெடி முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
சில ஆண்டுகளாக சந்தானம், சூரி இருவருமே ஹீரோவாக நடித்து வருவதால், காமெடி செய்ய தமிழ் சினிமாவில் வேறு நடிகர்கள் யாருமே இல்லை. வடிவேலு செகன்ட் இன்னிங்ஸ் காமெடி எடுபடாமல் போனதால், அவர் டிவி சேனலில் சமையல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக போய் விட்டார். அதனால் இப்போது தமிழ் சினிமாவில் ஒரே காமெடி நடிகராக உள்ள யோகிபாபுவுக்கு தான் ஏகப்பட்ட கிராக்கி. பட வாய்ப்புகளும் குவிகிறது.
அதனால் படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 12 லட்சம் என பேசி ரூ. 10 லட்சம் என சம்பளம் முடிவு செய்கிறார். எந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் உடனே கால்ஷீட் தந்து, அட்வான்ஸ் வாங்கி விடுகிறார். ஆனால், இதற்கிடையே வேறு பெரிய படங்களில் நடிக்க திடீர் வாய்ப்பு வந்தால், ஏற்கனவே கால்ஷீட் தந்த படங்களை விட்விட்டு அந்த ஷூட்டிங் சென்று விடுகிறார். பிறகு கால்ஷீட் தருகிறேன் என்றும் கூறி, தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார். மேலும், யோகி பாபு காமெடியாக நடித்த பல படங்கள், அவர் டப்பிங் பேசாததால், ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.





