- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய அளவில் வசூலை தராத யோகி பாபு படங்கள், ஆனாலும் மீண்டும் குவியும் பட வாய்ப்புகள்...

பெரிய அளவில் வசூலை தராத யோகி பாபு படங்கள், ஆனாலும் மீண்டும் குவியும் பட வாய்ப்புகள் – இப்படி ஒரு காரணம் இருக்குதுன்னு தெரியாம போச்சே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகாக இருந்தால் மட்டுமே நடிகராக முடியும் என்ற இலக்கணத்தை பல நடிகர்கள் உடைத்திருக்கின்றனர். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒருவரில் மிக முக்கியமானவர் யோகி பாபு. இவர் நடித்த ஆரம்ப கால படங்களில் இவரை, படத்தில் நடிக்கும் சக கேரக்டர்களே உருவக்கேலி செய்யும் படியான வசனங்கள் இருக்கும்.

ஆனால் இப்போது ஒரு நாளைக்கு படத்தில் நடிக்க, ஒரு நாள் கால்ஷீட்டுக்காக நடிகர் யோகிபாபு பெறுகிற சம்பளம் ரூ. 10 லட்சம் ரூபாய். ஒரு படத்தில் நடிக்க யோகி பாபு 10 நாள் கால்ஷீட் தருகிறார் என்றால், அவரது சம்பளம், 10 நாட்கள் மொத்த ரூ. 1 கோடி என்ற அளவில் மாதம் ரூ. 3 கோடி சம்பளமாக பெறுகிறார். அந்தளவுக்கு அவர் இப்போது டாப் காமெடி நடிகராக இருக்கிறார்.

- Advertisement -

எனினும் சந்தானம், சூரியை போலவே நடிகர் யோகிபாபுவும் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் நடித்த படங்களில் மண்டேலா படம் மட்டும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மீண்டும் மீண்டும் யோகிபாபுவுக்கு ஹீரோவாக நடிக்கும் பட வாய்ப்புகள் வருகின்றன. காமெடியன்களாக நடித்த சந்தானம், சூரி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க சென்ற பின், இப்போது லைவ் ஆக இருக்கிற ஒரே காமெடி நடிகராக யோகி பாபு மட்டுமே இருக்கிறார். அதனால் அவரை தவிர வேறு யாரும் காமெடி நடிகர்கள் முன்னிலையில் இல்லை என்பது முக்கிய காரணம்.

- Advertisement -

அதுமட்டுமின்றி புதிய நடிகர்களை கதாநாயன்களாக போட்டு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அச்சப்படுகின்றனர். என்னதான் சிறப்பான கதை, திரைக்கதை என இருந்தாலும் படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் முதலில் படத்தில் நடித்திருப்பது யார் என்றுதான் பார்க்கின்றனர். புதுமுகம் என்றால் 50ல் 20 பேர் கூட வருவது இல்லை. யோகிபாபு போன்ற பரிச்சய முகமாக இருந்தால், படம் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அதனால் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, நஷ்டமடைவதை விட, யோகிபாபு போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களை நடிக்க வைத்தால், படத்தில் முதலீடு செய்த பணமாவது மிஞ்சம் என்ற நிலையில்தான், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யோகிபாபுவை தேடி வருகின்றனர். அதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிகிறது. இதில் நேரம் நன்றாக இருந்தால், அவர் நடிக்கும் படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்