- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஸ்வரூபம் எடுத்த விவகாரம், மன உளைச்சலில் தி கோட் பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் எடுத்த...

விஸ்வரூபம் எடுத்த விவகாரம், மன உளைச்சலில் தி கோட் பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் எடுத்த அதிரடி முடிவு – இதுக்கு பின்னால பெரிய பஞ்சாயத்து ஓடுது போல தெரியுதே?

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. தந்தையை போலவே மகனும் இசையில் வல்லவர். பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருக்கிறார். கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

துபாயில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு அங்கு சொந்தமான மியூசிக் ஸ்டுடியோ மற்றும் ஆடம்பரமான பங்களா வீடு உள்ளது. அதுதவிர சென்னை வந்தால் மாதக்கணக்கில் தங்கும் விதமாக நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் குடியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் பெயர் பஸிஸத்துல் ஜமீலா என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் பஸிஸத்துல் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் நேற்று நுங்கம்பாக்கம் போலீசில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 20 லட்சம் வரை வாடகை பாக்கி தரவேண்டிய நிலையில், யுவன் சங்கர் ராஜா வீட்டை காலி செய்வதாக புகார் அளித்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புகார் மனுவில், வீட்டின் மாத வாடகை ரூ. 1.20 லட்சம், அட்வான்ஸ் ரூ. 12 எனவும் அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது. சமீபத்தில் வீட்டு வாடகை ரூ. 1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 18 லட்சம் ரூபாய் வாடகை தராமல் இருந்துள்ளார்.

- Advertisement -

அதன்பின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ரூ. 12 லட்சத்துக்கான காசோலை அனுப்பினார். அதன்பிறகு ஓராண்டு வீட்டில் வசித்த நிலையில் அதற்கான வாடகையை தரவில்லை. இந்நிலையில் வீட்டு உரிமையாளருக்கு தகவல் சொல்லாமல் வீட்டை காலி செய்து வருவதாகவும், பக்கத்தில் வசிப்பவர்கள் தந்த தகவல் மூலமே அவர் வீட்டை காலி செய்வது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 20 லட்சம் வரை வாடகை பாக்கி தர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் பஸிஸத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பல ஆண்டுகளாக பிரபல இசையமைப்பாளராக இருக்கும் தன் மீது அவதூறு செய்தியை பரப்பியதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். மேலும் இந்த பிரச்னையை உரிமையியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்