தமிழ் சினிமா நடிகைகளில் பலர் சங்கீதா என்ற பெயரில் இருக்கின்றனர். கபடி கபடி படத்தில் அறிமுகமான நடிகை சங்கீதா பல படங்களில் நடித்திருந்தாலும், டைரக்டர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்திருந்தார் சங்கீதா. அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் அந்த படத்தின் நடிகை என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பிரபல பாடகர் மற்றும் நடிகர் கிரிஷ்தான் சங்கீதாவின் கணவர். தமிழில் பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். மன்மதன் அம்பு படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருப்பார். உதவிக்கு வரலாமா, லவ் டுடே, எவனோ ஒருவன், டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு மிக பரிச்சயமான நடிகையாகவும் இருக்கிறார்.
மேலும், தமிழ் டிவி சேனல்களில் நடனம், பாட்டு போன்ற ரியாலிடி ஷோக்களிலும் பல ஆண்டுகளாக நடிகை சங்கீதா பங்கேற்று வருகிறார். அவரது கணவர் கிரிஷ், சென்னையில் பிரபல பாடகராக இருந்து வருகிறார். தமிழ் படங்களில் சங்கீதா தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் கலா மாஸ்டர், நடிகை சங்கீதாவை சமீபத்தில் நேர்காணல் செய்துள்ளார். அப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறாய், உனக்கு மிகவும் பிடித்த மொழி எது? தமிழ் உனக்கு பிடிக்கும் அதுதவிர என்ன என்று அவர் கேள்வி கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த நடிகை சங்கீதா, இல்ல தமிழ் கிடையாது. தமிழ் எனக்கு பிடிக்காது. எனக்கு தெலுங்குதான் பிடிக்கும். நான் தெலுங்கில்தான் அதிகமாக படம் பண்ணீட்டு இருக்கிறேன். இதை பார்த்து எத்தனை பேர் கோபப்பட்டாலும் அதுபத்தி எனக்கு கவலை இல்லை என்கிறார். அதற்கு கலா மாஸ்டர், ஏன் என்று கேள்வி எழுப்ப, ரெஸ்பெக்ட், தெலுங்கில் கொடுக்கிற ரெஸ்பெக்ட் தமிழில் கொடுக்க மாட்டாங்க. ஏன் தமிழில் இருக்கறவங்களுக்கு இந்த மனப்பான்மைன்னு எனக்கு தெரியாது என்றும் பதில் கூறியிருக்கிறார்.
தெலுங்கு படங்களில் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரெஸ்பெக்ட் தருகின்றனர் என்பதை அதில் வரும் ஒரு பாடல் காட்சியை பார்த்தாலே, தெரிந்துவிடும். நடிகைகளை கவர்ச்சிக்காக, ஆபாசத்துக்காக மட்டுமே பயன்படுத்துவது தெலுங்கு சினிமாதான். இந்த லட்சணத்தில் தமிழ் சினிமாவில் ரெஸ்பெக்ட் இல்லை என்று சொல்லும் சங்கீதா, ஆந்திராவுக்கே போய் விட வேண்டியது தானே, தமிழ்நாட்டுல ஏன் இருக்கறாங்க என்று ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.





