- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமீருக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் - டைரக்டர் அமீர் விடுத்த நேரடியான...

அமீருக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் – டைரக்டர் அமீர் விடுத்த நேரடியான எச்சரிக்கை – என் உரிமைகளோடு விளையாடாதீங்க

- Advertisement -

தயாரிப்பாளர் தனஞ்செயன் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் பருத்திவீரன் படம் சார்ந்த பிரச்னை குறித்து அமீருக்கு ஆதரவாக இருப்பவர்களை சந்தித்து, அவர்களை அமீருக்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் இயக்குநர் சசிக்குமார், தினகரன் ஜெய், இயக்குநர் கரு பழனியப்பன், வெற்றிமாறன், அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் சிவா ஆகியோரிடம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அமீருக்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என்றும், இந்த பிரச்னையை ஞானவேல் ராஜாவுக்கு சாதகமாக தீர்த்து வையுங்கள் என்றும் அவர்களிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகிகளையும் அவர் ஞானவேல் ராஜா, அம்மா கிரியேசன்ஸ் சிவா ஆகியோரை நேரில் அழைத்துக்கொண்டு சென்றும் பேசியுள்ளார். பத்திரிகையாளர் பிஸ்மியை நேரில் சந்தித்து, எங்களுக்கு ஆதரவாக காணொலி பதிவு செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இயக்குநர் அமீர் இதுகுறித்த பதிவை ஒன்றை, இன்று மாலை செய்துள்ளார். அதில், பருத்திவீரன் பிரச்னை குறித்த நான் பேச விரும்பாத நிலையிலும், யாராவது ஒருவர் அதை பேசும் நிலைக்கு என்னை தள்ளி விடுகிறார். என் பிரச்னையில் தனஞ்செயன் தேவையின்றி தலையீடு செய்து சிலரை சந்தித்து பேசி வருகிறார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

இயக்குநர் சசிக்குமாரை அவர் சந்தித்து பேசியதை உறுதிப்படுத்த, சசிக்குமாரை வேண்டுமானால் நான் காணொலி பதிவிட சொல்கிறேன். இந்த பிரச்னையை இப்போது இவர் திசை திருப்ப பார்க்கிறார். என் வாழ்க்கையோடு, என் உரிமைகளோடு அவர் விளையாடுகிறார்.இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இயக்குநர் சங்க செயலாளராக இருந்த போது தாண்டவம் படம் குறித்த பிரச்னை, தமிழ் சினிமா இயக்குநர்களை பற்றி அவர் தவறாக எழுதிய கட்டுரை ஆகிய தவறுகளுக்காக என்னிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அந்த காழ்ப்புணர்ச்சியால் இப்போது என் பிரச்னையில் தலையீடு செய்து வருகிறார். உயரமான இடத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த பிரச்னையில் இருந்து விலகி கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறேன், என்று அமீர் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்