நடிகர் தனுஷ் பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படிக்காதவன் என்ற படத்தில் முதலில் அசால்ட் ஆறுமுகம் என்ற காமெடி கேரக்டரில் சில நாட்கள் நடித்தவர் வடிவேலு. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஓவராக அலப்பறை செய்ததால் கடுப்பான தனுஷ், வடிவேலு வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு அதே கேரக்டரில் நடிகர் விவேக் நடித்திருந்தார். இப்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் டி56 படத்தில் நடிகர் வடிவேலு கமிட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், இந்த படத்தில் வடிவேலு கேரக்டர் மிகவும் அழுத்தமான கேரக்டர், படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்பதால் இயக்குனரும் தனுஷூம் விரும்பி அவர் கமிட் ஆகியுள்ளார். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் அவரது சுயரூபம் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவை பாடாய் படுத்தப்போகிறார் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.





