- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்த புது அவதாரம், இது யாருமே எதிர்பார்க்காத புது டிவிஸ்ட் தான்...

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்த புது அவதாரம், இது யாருமே எதிர்பார்க்காத புது டிவிஸ்ட் தான் – அறிமுக இயக்குநர்களுக்கு இனி கவலை இல்லை

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில், ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கை பெற முடியும். பல படங்களில் நடித்தும் முன்வரிசைக்கு வர முடியாத நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அதே போல், முன்னிலையில் இருந்து பின் வரிசைகளுக்கு சென்ற நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகர்களுக்கு மட்டுமே இருந்த இந்த பார்மூலா, இப்போதைய காலகட்டத்தில் அது இயக்குநர்களுக்கும் மாறி இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்களின் காலமாக மாறியிருக்கிறது. படத்தின் இயக்குநரை பார்த்த பிறகுதான் படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என கவனிக்கும் அளவுக்கு, ரசிகர்களின் பார்வை ஒட்டுமொத்தமாக இயக்குநர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் பாரதிராஜா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், ஷங்கர், ஏஆர் முருகநதாஸ், அட்லி போன்றவர்களின் வரிசையில் இன்று முக்கியமாக பேசப்படும் ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தி, கமல், விஜய் நடித்த படங்களை அடுத்து, 6வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கும் பெரிய இயக்குநராக இருக்கிறார்.

கைதி, விக்ரம் படங்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், ரஜினி 171 படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப் எழுதுவதில் இப்போது முனைப்பாக இருந்து வருகிறார். ரஜினிகாந்துடன் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் லெவல் நடிகர்கள் நடிக்கும் இந்த படம், லியோ படம் போல சொதப்பி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

இயக்குநராக உள்ள லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில், ஒரு காட்சியில் அவரது சலூனுக்கு ஹேர்கட் செய்ய வரும் இயக்குநராகவே நடித்துள்ளார். இதன்மூலம் திரையிலும் நடிகராக தோன்றிவிட்ட லோகேஷ் கனகராஜ். அடுத்து எடுத்துள்ள அவதாரம் தான் தயாரிப்பாளர்.

தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜி ஸ்குவாட் என பெயரி்ட்டுள்ள அவர், தயாரிப்பு நிறுவனத்தின் சிம்பலாக தேள் ஒன்று கொடுக்குடன் இருப்பதை வைத்துள்ளார். இதன்மூலம் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் படம் எடுக்க, தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் உதவ முன்வந்துள்ள லோகேஷ் கனகராஜ் மூலம், தமிழ் சினிமாவுக்கு பல புதிய இளம் இயக்குநர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Director Lokesh Kanagaraj started a new production company

- Advertisement -

சற்று முன்