- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு எழுதின ஒரு பாட்டுல என்னை பத்தி எழுதியிருந்தார், ஏம்பா இப்படி எழுதியிருக்கே என்று அவரிடமே...

சிம்பு எழுதின ஒரு பாட்டுல என்னை பத்தி எழுதியிருந்தார், ஏம்பா இப்படி எழுதியிருக்கே என்று அவரிடமே கேட்டேன் – கவிஞர் வாலி சொன்ன ரகசியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவிஞர் வாலி பல ஆயிரம் பாடல்களை எழுதியவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் துவங்கி ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் என 3 தலைமுறைகளுக்கு சினிமா பாடல்களை எழுதிய மிக முக்கியமான கவிஞர். கவியரசு கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக அதிக பாடல்களை எழுதிய பிஸியான கவிஞர்தான் வாலி.

கவிஞர் வாலி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக ஹேராம் சத்யா பார்த்தாலே பரவசம் கடவுள் அமைத்த மேடை பொய்க்கால் குதிரை ஒரே ஒரு கிராமத்திலே சிட்டுக்குருவி என் தமிழ் என் மக்கள் உள்ளிட்ட சில படங்களில் சில நிமிடங்கள் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நிறைய சிறுகதைகள் உரைநடை மற்றும் கவிதைகளை வாலி எழுதியிருக்கிறார். அவதார புருஷன் கிருஷ்ண விஜயம் பாண்டவர் பூமி நிஜ கோவிந்தம் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கவிஞர் வாலி எழுதிய நூல்கள் இலக்கிய உலகில் வாசகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பும் கவனமும் பெற்றவை. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என எம்ஜிஆர் பாடிய பாடல், கவிஞர் வாலியின் வரிகள்தான் என்றாலே அவர் எத்தகைய ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவில் எழுதியிருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.

பல ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய கவிஞர் வாலி கூறியதாவது, வல்லவன் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாட்டு எழுதியிருந்தார். லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே என்ற அந்த பாடலில் ஒரு வரியில், வாலி போல எனக்கு பாட்டு எழுத தெரியலையே என்று எழுதியிருந்தார்.

- Advertisement -

நான் உடனே சிம்புவை அழைத்து இப்படி சொன்னேன். என்னப்பா, லூசுப் பெண்ணே பாட்டுல வாலி போல பாட்டு எழுத எனக்கு வரலையே, அப்படீன்னு எழுதி இருக்கே? உங்க அப்பா டி ராஜேந்தரே நிறைய பாட்டு எழுதியிருக்கிறார். அவர் ஏதாவது என்னைய தப்பா நெனைச்சுக்க போறார். நீ அவரை புகழாமல் என்னைப் புகழறியே என்று கேட்டேன்.

சிம்பு அதற்கு சொன்ன பதில் இதுதான். இந்த பாட்டை நான் என் அப்பாகிட்ட பாடி காமிச்சேன். அவர் ரொம்ப பெரியவர். நீ நல்ல காரியம் பண்ணினே. ரொம்ப பிரமாதம் என்று பாராட்டினார் என்று சிம்பு என்னிடம் சொன்னார். நான் சொல்லியா சிம்பு அதை செய்தார்? மூத்தோர் சொல் அமிர்தம். முன்னோர்களை மதிக்கிறாங்க என்று கவிஞர் வாலி சிம்பு குறித்து பெருமிதமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்