தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜீத்குமார். ரஜினி கமல் விஜய் அஜீத் குமார் ஆகிய 4 பேர் மட்டுமே இன்றைய தமிழ் சினிமாவில் நஷ்டம் தராத நட்சத்திர நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் படங்கள் மிக மோசமாக தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக இவர்களது படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
அதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தில் குறையுமே தவிர, நிச்சயமாக படத்தை தயாரிக்க அவர்கள் போட்ட முதலீட்டில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதால், இவர்கள் 4 பேரை நட்சத்திர நடிகர்களாக தயாரிப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருந்தார். மஞ்சு வாரியார் ஜோடியாக நடித்திருந்தார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
துணிவு படம் ரிலீசான அதே நாளில்தான் நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படமும், கடந்தாண்டில் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படமும் வெளியானது. வாரிசு படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் 2 படங்கள் வெளியான நிலையில் துணிவு படத்துக்கு பிறகு, இன்னும் அஜீத் குமார் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது அவரது ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் தள்ளி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படமும், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படமும் படப்பிடிப்பில் உள்ளது. இந்த 2 படங்களுமே அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விடாமுயற்சி படம் வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு ரிலீசாகும் என்றும் உறுதியாகி உள்ளது. அடுத்து குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகிறது.
ஆனால் வருகிற 31ம் தேதி தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த அஜீத்குமார் ரசிகர்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனால் தற்போது தீபாவளி பரிசாக வருகிற 31ம் தேதிக்குள் அல்லது 31ம் தேதி அன்று விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது ஏகே ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும். ஆனால் இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், விடாமுயற்சி டீசர் எப்போது வெளியாகும் என்பதில் படக்குழு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது. அதனால் ரசிகர்கள் எப்போது விடாமுயற்சி டீசர் ரிலீஸாகும் என்று வலைதள பக்கங்களில் விழிவைத்து காத்திருக்கின்றனர்.





