- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் போட்ட பிளானில் அதிரடி மாற்றம், நாடாளுமன்ற தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டைரக்டர்...

விஜய் போட்ட பிளானில் அதிரடி மாற்றம், நாடாளுமன்ற தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டைரக்டர் – சர்கார் சம்பவம் நிஜத்தில் நடக்குமா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது நடிகர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 6 மாதங்களாக நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இப்போது விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு, ரஷ்யா செல்லும் கோட் படக்குழுவினர், ரஷ்யாவில் தொடர்ந்து 16 நாட்கள் ஷூட்டிங் நடத்துகின்றனர். இதில் பெரும்பாலும் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகளே படமாக்கப்பட இருப்பதால், விஜயும் அங்கு செல்ல இருக்கிறார். ஆனால் இன்னும் ரஷ்யா செல்லும் தேதிகள் முடிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இன்னும் திருவனந்தபுரம் படப்பிடிப்பு முடியவில்லை.

- Advertisement -

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய நடிகர் விஜய், கடந்த மாதம் பிப்ரவரி 2ம் தேதி, தனது கட்சி வருகை குறித்தும், தனது இலக்கு குறித்தும் சில முன்னறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டார். அதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. அதே நேரத்தில் எங்களது இலக்கு 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபை தேர்தல்தான் என்றும் தீர்மானமாக குறிப்பிட்டார்.

அதன்பின் சில வாரங்கள் கழித்து, தனது கட்சியில் உறுப்பினராக சேர விரும்புவோர், அவர்களுக்கு விருப்பமிருந்தால் சேரலாம் என்று குறிப்பிட்டு, ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில மணி நேரங்களிலேயே 50 லட்சம் பேர் வரை, அந்த செயலி மூலம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அபிமானத்தையே இந்த சம்பவம் வெளிப்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழலில், வரும் ஏப்ரலில் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் பல லட்சக்கணக்கான மக்கள் திரளும் அந்த கூட்டத்துக்கு அனுமதி கிடைக்காது, தேர்தல் கமிஷன் அனுமதிக்காது என்பதால் அதை விஜய் ஒத்தி வைத்து விட்டார். அந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கோட் பட டைரக்டர் வெங்கட்பிரபு ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் ரஷ்யாவில் ஷூட்டிங் நடத்தவும் ஏற்பாடுகளை செய்துவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில், இப்போது ஏப்ரலில் தொடர்ந்து 16 நாட்கள் கோட் பட ஷூட்டிங் பங்கேற்கும் விஜய், வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி ஓட்டுப் போடப் போகிறார், ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டு போட்டு விட்டு செல்வாரா, அதாவது சர்கார் படத்தில் என்ஆர்ஐ ஆக இருக்கும் விஜய், தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தனி விமானத்தில் சென்னை வருவார். அதுபோலவே, நிஜமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஷ்யாவில் இருந்து விஜய் விமானத்தில் சென்னைக்கு வந்து ஓட்டுப் போட்டு விட்டு மீண்டும் ரஷ்யா செல்வாரா, சர்கார் படம் போலவே ஒரு சம்பவம் நடக்குமா, என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்