மலையாளத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் உருவான படம் மனிசித்திரதாழு. மோகன் லால், ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அந்தப் படத்தை டிவியில் தனது குடும்பத்தினருடன் பார்த்துக்கொண்டிருந்தார் பி.வாசு. அதன் பிறகு குளிக்க சென்றிருக்கிறார். அப்போது அவரது நான்கு வயது மகள் கதவை வேகமாக தட்டி நான் நாகவள்ளி என்ற மனிசித்திரதாழு படத்தில் வருவது போல் பேசியிருக்கிறார்.
இதனையடுத்து பி.வாசு இந்தப் படத்தை ரீமேக் செய்தால் என்ன யோசித்து அதற்கான உரிமையை முறையாக பெற்றார். பிறகு கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து ஆப்தமித்ரா என்ற பெயரில் எடுத்தார். அங்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த சமயத்தில் தமிழில் ரஜினிகாந்த் பாபா படம் கொடுத்து பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தார். இதனால் உடனடியாக ஒரு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என தவித்துக்கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் இந்தக் கதையை ரஜினியிடம் பி.வாசு கூறினார். மேலும் கதையில் சில மாற்றங்களையும் செய்தார். ரஜினி நடிக்க ஒத்துக்கொண்டார். படத்தில் வடிவேலு, நாசர், நயன், ஜோதிகா, பிரபு என நட்சத்திர பட்டாளமே நடித்தது. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி மெகா சாதனை படைத்தது. படம் இண்டஸ்ட்ரி ஹிட்டடித்தது.
இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கியிருக்கிறார். அதில் வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் நடித்திருக்கின்றனர். அவர்கள் தவிர வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படத்துக்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 15ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் லைகா சுபாஸ்கரன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. மேலும் சந்திரமுகி 2 வாய்பை நானாகவே பி.வாசு சாரிடம் கேட்டு வாங்கியதாகவும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா ரணாவத் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The moment we've all been waiting for is finally here!
The most awaited OFFICIAL TRAILER of Chandramukhi-2 is OUT NOW on YouTube!
Telugu Release By @Radhakrishnaen9 @SVR4446#Chandramukhi2
#PVasu
@offl_Lawrence @KanganaTeam
🎶… pic.twitter.com/9L1mDddKui— Lyca Productions (@LycaProductions) September 3, 2023
இன்று அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை ஓரளவு மட்டுமே திருப்திப்படுத்தியிருக்கிறது. வேட்டையனாக லாரன்ஸை பார்க்கவே முடியவில்லை என கூறும் ரசிகர்கள்; சந்திரமுகியாக ஜோதிகா கலக்கியிருந்தார். அவர் இடத்தில் கங்கனா சுத்தமாக செட் ஆகவில்லை என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





