- Advertisement -
Homeபொழுதுபோக்குசமந்தா செய்யப்போகும் காரியத்தால் ஏற்படப்போகும் பல கோடி ரூபாய் நஷ்டம், ஆனாலும் என்ன பண்றது?

சமந்தா செய்யப்போகும் காரியத்தால் ஏற்படப்போகும் பல கோடி ரூபாய் நஷ்டம், ஆனாலும் என்ன பண்றது?

- Advertisement -

சமந்தா தற்போது தென்னிந்தியாவின் உச்ச நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஆனால் அவரது வளர்ச்சியில் ஒரு தடை கல்லாக இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் மயோசிட்டிஸ் என்ற நோய். கடந்த பல வருடங்களாகவே இந்த நோயால் சமந்தா அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் அந்த நோயை மிகவும் தைரியமாக எதிர்கொண்டு தனது உடலை பேணிக் காத்து வருகிறார். அது மட்டுமல்லாது அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே பல திரைப்படங்களில் சமந்தா நடித்தும் வருகிறார்.

மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக சமந்தா அவ்வப்போது அமெரிக்கா செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஒரு வருடம் சினிமாவிற்கு பிரேக் எடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என தகவல்கள் வருகின்றன.

- Advertisement -

சமந்தா தற்போது தெலுங்கில், “குஷி” மற்றும் ஆங்கிலத்தில் “சென்னை ஸ்டோரி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படங்களின் பணிகளை முடித்துக்கொடுத்துவிட்டு அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமந்தா அமெரிக்கா செல்வதால் அவர் பல கோடிகளை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சமந்தா ஒரு படத்திற்காக 4 கோடிகள் சம்பளமாக வாங்குகிறாராம். இந்த சமயத்தில் அவர் ஒரு வருடம் நடிக்காமல் போனால் அவருக்கு 12 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலால் சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

எனினும் சமந்தாவின் உடல் நிலை சரியானால்தான் அவரால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க முடியும் என்பதால் அவர் விரைவில் குணமாகி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்